118
ஆடுவது வேகமாகவும் துடிப்பாகவும் இருக்கும் இடலாக்குடிக் கோயிலில் பலர் மாலையிட்டுக் கூடியாடுவர். அதில் ஒரு ஒழுங்கு இருப்பதைக் காணலாம். அவர்கள் வரிசையாக நின்று சில சமயம் ஆடுவது தேவராட்டத்தை நினைவு படுத்தும்.மேள தாளத்துக்கு ஒத்தவாறு அவர்கள் ஆடுவர். குமரி மாவட்டத்தி
லுள்ள சாத்தான் கோயில்களில் நாகப்பாம்பின் உருவம்
வணங்கப்படுகிறது. ஆனால் வில்லுப்பாட்டில் ஐயன்கதையைப் பாடுகிறார்கள். ஐயனாரும் சாத்தானும் கதை வரலாற்றில் ஒன்றாகக் காணப்பட்டாலும் உருவத்திலும் வழிபாட்டு முறை சளிலும் வேறாகத் தோன்றுகின்றனர்.
ஐவர் ராசாக்கள் குமரியை அடுத்த பொத்தையடியில் (பரமார்த்தலிங்கபுரம்) தெய்வமாக வழிபடப் படுகின்றனர். உண்மையில் இவர்கள் வள்ளியூரை ஆண்ட குலசேகரப் பாண்டியனும் அவனுடைய தம்பியரும் ஆவர். வில்லுப்பாட்டு விளக்குவது போன்று ஆட்டம் நடக்கும். அவர்களுடைய தூதனான ஓட்டக்காரன் அங்கும் இங்கும் ஓடிஓடி ஆடுவதைக் காணலாம். வரலாற்றிலிருப்பதை நடித்துக் காட்டும் ஆடலா கவே இது அமைகிறது. அதைத் தெய்வ அருள் இறங்கி நடப் பதாக நாட்டுப்புற மக்கள் நம்பி ஏற்றுக் கொள்கின்றனர்.
சேத்திரபாலன், மன்னன் கருங்காலி போன்ற தெய்வங்களை பூதங்கள் என்றும் வாதைகள் என்றும் மக்கள் கூறி அச்சவழிபாடு செய்கிறார்கள். ஏரலில் இருக்கும் சேர்மன் சாமி, சுவாமி தோப் பிலிருக்கும் வைகுண்ட சாமி ஆகியோர் மக்களுக்காக வருந்தி பாடுபட்ட பெரியார்கள். இன்று அவர்கள் அடக்கமாகி இருக்கும் இடங்கள் புகழ் பெற்ற ஆலயங்களாகி விட்டன. ஆடலும் பாடலும் நடைபெறுகின்றன. தேரும் திருவிழாவும் சிறப்பாக அமைந்துள்ளன. அந்த இடங்களில் அருளும் ஒளியும் நிறைந்திருப் பதாக ஆயிரமாயிரம் மக்கள் நம்பிக் கூடுகின்றனர். களுடைய வேண்டுதல் நிறைவேறுவதாகக் கூறுகின்றனர்.
அவர்
செட்டியா பத்திலுள்ள தெய்வமும் குரங்கணி அம்மனும் அருளாற்றலுடைய தெய்வங்கள் என்று நெல்லை, குமரி மாவட்ட மக்களில் பலர் நம்பிக்கையுடன் அங்கே செல்கின்றனர். கலைகள் பல நடத்திக்களிக்கின்றனர். தோட்டுக்காரி, குமரப் பராசா கதை கன்னியாகுமரியின் பக்கத்தில் நடந்த ஒரு நிறை வேறாத காதல் நிகழ்ச்சி. அவர்கள் தீயில் குதித்து எரிந்து சாம் பலான இடம் இன்றும் நினைவாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் மக்கள் மனத்தில் தெய்வமாக நிலைத்து விட்டனர்