1 19
சொத்தவிளை ஊர் தோட்டக்காரி அம்மன் கோயில் புகழு டையது. தெய்வமேறி ஆடுவது கதைப் போக்கை ஒட்டியே இருக்கும். காதல் ஈடேறாத இரு தெய்வங்களும் ஆடும் போது ஒருவரை ஒருவர் தொடுவதே இல்லை. துரத்துவதும் ஓடுவது மாக இருக்கும். வணங்கும் இடத்தில் மக்கள் அவ்வாறு ஆடுவதை ஒரு நாடக மேடைக் காட்சியாகக் கருதுவதில்லை.
மிகக்
இசக்கியம்மன் மிக முக்கியமான பெண் தெய்வம். இயக்க சக்தியாகிய உமாதேவியின் கோர உருவாகக் காளியைப் படைத் தது போன்று இயக்கி என்றே சரியாக அழைக்கப்பட வேண்டிய இசக்கியை மனிதன் உருவாக்கினானா என்பதை அறிவது நலம். காளிக்கும் இசக்கிக்கும் நிரம்ப வேறுபாடுகள் காணப்படு கின்றன. கதை மிக குரூரமாக உள்ளது. கணவனைக் கொன்று ஊரையழித்துக் கொடுமை செய்த கடுமனத்தளாக இசக்கி படைக்கப் பட்டுள்ளார். நெல்லை குமரி மாவட்டங் களில் ஆயிரக்கணக்கான இசக்கி கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோயிலிலும் நூற்றுக் கணக்கான இசக்கி உருவங்கள் மண்ணால் செய்து அடுக்கப்பட்டுள்ளன. ஆண்களும் களும் தெய்வமேறி ஆடுவர். மிக்க வெறியுடைய ஆட்டமாகக் காணப்படும். மக்களிடம் இரக்க மின்றி பேசி அவர்களை அச்சுறுத்துவதைக் காணலாம். மிருகப் பலி கொடுத்து இந்தத் தெய்வத்தை அமைதிப்படுத்த வேண்டும் என்று மக்கள் கருதுவர். சூலமேந்தி நாக்கை நீட்டியபடி ஓலமிட்டு ஆடுவதை யாராலும் அச்சமின்றி அருகில் நின்று காணமுடியாது. நெற்றியில் சிவந்த மஞ்சணை பூசி அரையில் சிவந்த ஆடை கட்டி கழுத்தில் சிவந்த மாலை அணிந்து ஆடுவது வழக்கம.
பெண்
பழவூர், முப்பந்தல், கள்ளிக்காடு (பெருமாள்புரம், சுக்குப் பாறை, ஓடக்கரை (தெங்கம்புதூர்), நடுக்காடு (நாகர் கோவில்) பொன்னார்மடை, நெருஞ்சிவிளை ஆகிய இடங்களிலுள்ள இசக்கி கோயில்கள் சிறப்புமிக்கவை. 'புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கி' (15, 116) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் இயக்கிக்கும் குண்டலகேசி குறிப்பிடும் பழையனூர் நீலிக்கும் தெய்வமாகியிருக்கும் தென்மாவட்ட இசக்கிக்குமுள்ள தொடர்·பு களைச் சிந்திக்கலாம். குமரி மாவட்டத்திலுள்ள பொட்டல் ஊரிலுள்ள இசக்கியை நீலி என்றும் அவளுடைய தம்பியை நீலன் என்றும் கூறுவர். இசக்கியம்மன் வில்லுப்பாட்டில் அவள் கணவனால் கொல்லப்பட்டு பின் பேயுருவில் பெண்ணாகிக்