உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




131

தொடுக்கப்பட்டு அவை குஞ்சங்கள்

போன்று தொங்கும். தோற்றப் பொலிவுக்காக இவை அணியப்படுகின்றன. ஐலரா போன்ற இசைக்கருவிகள் ஒலிக்கப்படும்.

மாரியம்மன், முருகன் போன்ற கோயில் ஊர்வலங்கள் நடக்கும்போது சக்கையாட்டம் ஆடுவது வழக்கம். அந்த அந்தத் தெய்வக் கதைகளைப் பாடிக் கதையை வளர்த்துக் கூறுவர். இக்காலத்தில் தேசியப் பாடல்கள், வீரர்களின் வரலாறுகள், நீதி விளக்கக் கதைகள், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெறுகின்றன. இன்பமும், அறிவும், சமய வுணர்வு இவ்வாடல் பாடல்களின் முக்கிய நோக்கங்களாக அமைகின்றன.

ஆட்டம் தொடங்கும்போது மக்களைப் பார்த்துப் பணிவர். பின் தங்களை அறிமுகப்படுத்தும் வாயிலாக ஒரு பாட்டைப் பாடுவர். அது ஓர் அன்பான வேண்டுதலாக அமையும். அவை யடக்கமாகவும் அப்பாடலைக் கருதலாம்.

'பாருங்கள் பாருங்கள் பாருங்களே-பாலர் நாங்கள் ஆடும் விதத்தைப் பாருங்களே

பார்புகழும் இந்தச் சக்கையாட்டத்தைப்

பாரெங்கும் போற்றிட ஆடும் விநோதத்தைப் பாருங்களே.' பாடலில் வரும் 'பாலர்' என்ற சொல் சிந்தனைக்கு உரியது. உண்மையில் தங்களைச் சிறியவர்களாக மக்கள் கருத வேண்டும் என்று கூறினார்களா அல்லது முன்னர் இளைய வர்கள்தான் இந்த ஆட்டத்தை ஆடியுள்ளனரா என்பதை அறிய வேண்டும். இப்பொழுது இளைஞர்களும் நடுத்தர வயதினரும் ஆடுகிறார்கள். சிறியவர் ஆடுவதற்கும் ஆகவே உள்ளது. சக்கைகளைத் துடிப்புடன் அடித்து விரைவுடன் பாடினால் இவ்வாடல் சிறப்பாக இருக்கும். நீளமான மரத் துண்டுகளைச் சிறுவர்களின் விரல்களில் இறுக்கமாகக் கட்டி யிருக்க முடியுமா என்பதும் கருதுவதற்கு உரியது. இளமைத் துடிப்புடன் பாடியாடும் இவர்கள் தங்களைப் பாலர் என்று கூறியதைத் தவறாகக் கருத முடியாது, பணிவுக் கூற்றாகக் கொள்வது சரியே.

வைந்தனை ஆட்டம்

வட ஆர்க்காடு தென் ஆர்க்காடு போன்ற மாவட்டங்களில் வைந்தனை ஆட்டம் நடைபெறுகின்றது. வளந்தனையாட்டம் என்று கூறுகிறார்கள்.

சில

இதைச் து ஆண்களே