உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

ஆடுகிற ஒரு வகையான கோலாட்டமாகும். ஆட்டம் ஆடுவோர் காலில் சதங்கை கட்டியிருப்பார்கள். டோலக், தாளம் முதலிய கருவிகள் இசைவொலி எழுப்ப இந்த ஆட்டம் நடைபெறும். தாளக்கட்டுடன் மிகச் சிறப்பாக ஆடவேண்டிய கலையாக இது உள்ளது. வள்ளி திருமணம், பாரதக் கதை களைப் பாடியாடுவர். பாடல்கள் பெரும்பாலும் காவடிச்சிந்து அமைப்பில் இருக்கும். விழாக்களில் இது பெரும்பாலும் நடத்தப் படுகிறது.

கைச் சிலம்பு

கையில் சிலம்பை வைத்துத் தாளத்துடன் ஆடுவதால் கைச் சிலம்பு ஆட்டம் என்ற பெயருடன் விளங்குகிறது. இதில் நாலு ஆடவர் இரண்டு பாடகர் ஆகியோர் இடம் பெறுவர். கால் களில் இவர்கள் சதங்கை கட்டியிருப்பர் காஞ்சீபுரத்தில் கைச் சிலம்பு ஆட்டம் பெருவழக்காக உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள இடங்களிலும் இது நடைபெறுவதைக் காணலாம்.

பிற மாவட்டங்களில் அதிகம் நடைபெறாத கைச்சிலம்பு

ஆட்டத்தைச் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உரியதாகக் கருதுவது தவறில்லை. இந்த ஆடலுக்குப் பல்லவ மன்னர்களின் பேராதரவு இருந்துள்ளதாகத் தெரிகிறது.

சில கிளைக் கதைகளைப் பாடல்களால் விளக்குவதைக் கைச்சிலம்பு ஆட்டத்தில் காண முடிகிறது. முக்கியமாகப் பொம்மி கலியாணம் கதைவுருவில் மிக அழகாக ஆடிக் காட்டப் படுகிறது. கதைப் பாடலைக் குழுவின் தலைவன் முதலில் பாடுகிறான். பின்னர் அதைத் தொடர்ந்து மற்றவர் பின்பாட் டாகப் பாட ஆட்டம் நடைபெறும். கதைகளிலுள்ள உணர்ச்சிக் கூறுகளைச் சுவையுடன் புலப்படுத்துவது இந்த ஆடலில் காணப்படும் முக்கியமான சிறப்பாகும். மக்கள் இவ்வாடலை மிகவும் நன்றாகச் சுவைத்து மகிழ்வதைக் காண முடியும்.

இரவு

அம்மன் விழா. நவராத்திரி விழா ஆகியவற்றில் நேரத்தில் கைச்சிலம்பு ஆட்டம் கவின்கலையாக நடக்கும். முன்பு உடுக்கு, பம்பை முதலிய இசைக் கருவிகளைப் பயன் படுத்தியுள்ளனர். இப்பொழுது மிருதங்கம், தபேலா, கடம் டோலக் முதலியவற்றை அடித்துத் தாள இசை பெருக்குகின்ற னர். கையில் வைத்திருக்கும் சிலம்பின் ஒலியைத் தனியாக ஒலித்துக் காட்டியும் மக்களை மகிழ்விப்பார்கள்.