உடுக்கடிப் பாட்டு
133
இராமநாதபுரம், மதுரை புதுக்கோட்டை பகுதிகளிலுள்ள பல ஊர்களில் உடுக்கடிப் பாட்டு நல்ல முறையில் கலைத்தன்மை சிறக்க நடக்கிறது. இதற்கு இரண்டு தவலை (தகரப் பானை) ஒரு சாப்ளாக் கட்டு, ஒர் உடுக்கு ஆகிய கருவிகள் தேவை யுள்ளன. ஐந்து பேர் இதில் கலந்து பாடுகின்றனர். பெரும் பாலும் மழையின்றி தவிக்கும் பஞ்ச காலத்தில் உடுக்கடிப்பாட்டு பல ஊர்களில் நடத்தப்படுகிறது.
பெரு
காத்தவராயன் கதைபாடுவதே இந்தக் கலையில் வழக்காக உள்ளது. பாடல்கள் மிக எளிமையாகவும் பெருஞ் சுவையுடையவையாகவும் காணப்படுகின்றன. பாடும் இசையும் பாடகரின் குரல் இனிமையும் தாளத்தின் அமைப்பும் அனைவரையும் மெய்மறந்து கேட்கச் செய்யும். உடுக்கடிப் பாட்டின் அமைப்பையும் போக்கையும் காத்தவராயன் கதைப் பாடல் மூலம் அறிய முயலலாம்.
காப்பு
'முந்தி முந்தி விநாயகனே விநாயகனே முருக நல்ல சரஸ்வதியே சரஸ்வதியே கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே - முன்நடவாய் முன்நடவாய்
வேலனுக்கு முன்பிறந்த விநாயகனே— முன்நடவாய் முன்நடவாய்'
(காத்தவராயனின் மாமன் மகள் கருத்தழகி மோர் விற்பது)
'பாலுதான் வாங்கலியோ ? பாலுதான் வாங்கலியோ? பாலோ அம்மா பாலோ !
தயிருதான் வாங்கலியோ ? தயிருதான் வாங்கலியோ? தயிரோ அம்மா தயிரோ !
மோருதான் வாங்கலியோ? மோருதான் வாங்கலியோ ?' மோரோ அம்மா மோரோ !'
(ஆரியமாலாவுக்குக் காத்தவராயன் பாடிய பாடல்)
'யானை நரம்பெடுத்து ஆட்டிவிட்டார் கிண்ணரத்தை அப்போதும் பேசவில்லை அண்ணாரோடக் கிண்ணரந்தான் பூனை நரம்பெடுத்துப் பூட்டிவிட்டார் கிண்ணரத்தை அத்தாலும் பேசவில்லை அண்ணாரோடக் கிண்ணரந்தான்