உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

முழங்கை நரம்பெடுத்து மூட்டிவிட்டார் கிண்ணரத்தை அப்போது பேசுதுபார் அண்ணாரோடக் கிண்ணரந்தான் என்ன சொல்லிப் பாடுதுபார் எங்களையாக் கிண்ணரந்தான்.

அடி ! மரத்தடியில் நானிருக்க ஆரியமாலா-உனக்கு மாளிகையில் கூட்டமென்ன ? அத்தைமகன் இங்கிருக்க

அரண்மனையில் கூட்டமென்ன? மாமன்மகன் இங்கிருக்க

மாளிகையில் நாட்டமென்ன ?

இப்படியாய் பாடுதுபார் எங்களையாக் கிண்ணரந்தான். நடந்துவா மயிலே! ஓகோ! நங்கை யிளங்குயிலே ! செய்யாஞ் சிறையிலிருக்கும் செங்கழனி ஓடைதனில் நடந்துவா மயிலே ! ஓகோ ! நங்கை யிளங்குயிலே!' (காத்தவராயனின் தாய் அவனைத் தடுத்துக் கூறல்)

'தாயினும் பத்தினிடா ! தாரமுன்னு சொல்வாரடா! என்னிலும் பத்தினிடா ! இடும்பு நினைக்காதேடா!'

இவ்வாறு பலபடிகளாய் உடுக்கடிப் பாட்டு காத்தவராயன் கதையை மிகவும் இனிமையாக வளர்த்துச் செல்லும். இதை மானகிரியைச் சேர்ந்த கருப்பன் பாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறுவர்.

கருவிகளை அடித்து முழக்கிப் பாடலில் இளையோடும் கதையை விளக்குவதும் இசையை இனிமையாகப் பெருக்குவதும் சுவைமிக்கதாய் கலைத்தன்மை சிறந்ததாய் அமையும். தரையில் அமர்ந்தே இவர்கள் பாடுவர். நடிப்பது இல்லை. உணர்ச்சிகளை ஒலியாலும் முகக் குறிப்புகளாலும் எளிதாக விளக்கிக் காட்டி விடுவர். வேடப் புனைவு கிடையாது. குரலை மாற்றிப் பாத்திர வேறுபாட்டைப் புலப்படுத்துவர். உணர்ச்சி மிக்க இசைப் பாடல்களும் இனிமை மிக்க உடுக்கின் தாள ஒலியும் உடுக்கடிப் பாட்டின் கலைத் தன்மைக்கு அடிப்படையாக அமைகின்றன. சுவையாகக் கதைகளைக் கூறுவதே இந்தக் கலையின் முக்கிய நோக்கம்.

வில்லுப் பாட்டு

நாட்டுப்புறக் கலைகளில் வில்லுப்பாட்டை உறுதியாகக் கன்னியாகுமரி மாவட்டங்கள்

மிகச் சிறந்த ஒரு கலையாக

கூறலாம். திருநெல்வேலி, வில்லுபாட்டின் தாயகமாக