நாடக அமைப்புக் கலைகள்
நாடகக் கலையின் இயல்புகள்
கின்றன.
நடிக்கப் பெறுவது நாடகம். இயல்பாக நடப்பதைக் கலை யாகக் கண்டு விளையாட்டுணர்வுடன் பின் கண்டுகளிக்க நடித்துக் காட்டுவது நாடகக் கலையின் முக்கிய இயல்பாகும். நாட்டுப்புறக் கலைகளில் பல இத்தகைய இயல்புடன் விளங்கு அவற்றில் சில ஆடல்களாகவும் சில கூத்துக்களாகவும் உள்ளன. தனித்தனிப் பாடல்களை ஆடிக்காட்டுவதும் சிறுசிறு நிகழ்ச்சிகளையோ முழுக்கதைகளையே நீண்ட நேரம் ஆடியும் பாடியும் நடித்துக் காட்டுவதை நாட்டுப்புறக் கூத்தாகக் கொள்ளலாம். ஆடலையும் கூத்தையும் வரையறுத்துப் பிரித்துக் காண்பது கடினம். தொடரான நடிப்பு மிகுந்ததைக் கூத்தாகக் கருதுவது பொருத்தமாக அமையலாம்.
ஆடல் திருத்தமுற்று நடனமாகவும் கூத்து சீர்திருந்தி நாடக மாகவும் வளர்ந்துள்ளதாகவும் கருதலாம். ஆடல், கூத்து இரண்டையும் 'நாடகம்' என்ற சொல்லால் முன்பு குறித்துள்ள னர். அவை இரண்டையும் கூத்தாகவும் கூறியுள்ளனர். தெளி வற்று பயன்படுத்தப் பெற்றிருக்கும் இந்தச் சொற்களை தெளிவு பட உணர்வதற்காக மேலே கூறப்பெற்றுள்ள விளக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
தமிழரின் நாட்டுப்புறக் கலைகளில் ஆடலும் கூத்தும் ஓரளவுப் பிரித்துக் காணும் நிலையில் உள்ளன. வேறுபடுவதற் கும் இடம் இல்லாமல் இல்லை. கூத்துக்கள் நாடகத் தன்மையை மிகுதியாகக் கொண்டுள்ளன. இக்காலத்தவருக்குத் திருந்திய முறையில் கிடைக்கப்பெற்றுள்ள நாடக இனங்களெல்லாம் அவை தோன்றிய காலத்தில் நாட்டுப்புறக் கூத்துக்களாகவே நடைபெற்றிருக்க வேண்டும். கால ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள கலைவளர்ச்சி அவைகளுக்குச் செம்மை வடிவம் கொடுத்திருக்க வேண்டும். முற்காலத்தில் அவை எளிமையாக நாட்டுப்புற மக்களால் திருத்தமுறாத கலைகளாகவே நடத்தப் பெற்றிருக் கும். மக்கள் இசைக்குச் சிறப்புக் கொடுத்த காலத்தில் பல அமைப்புடைய இசை நாடகங்களை மக்கள் முன் நடித்திருப்பர்