150
ஆவற்றில் முக்கியமானவை என்று கருதத் தக்கவை நான்காகத் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. அவை பள்ளு, குறவஞ்சி, குளுவம், நாட்டார் கூத்து "அல்லது நாட்டார் நாடகம் (தெருக் கூத்து) என்பன ஆகும். தனி மனிதன் தன் வாழ்வின் பகுதியைத் தொடர்புபடுத்தி நீண்ட நேரம் நடிக்கும் நாடகமும் ஒன்று உள்ளது. அதனுடன் சேர்த்து நாட்டுப்புறக் கலை நாடகங்களை ஐந்தாகக் கொள்ளலாம்.
பள்ளு நாடகம்
பயிர்த்தொழிலைச் செய்து உயிர்வாழும் நாட்டுப்புறத்து எளிய மக்களான பள்ளர், பள்ளியரைப் பாத்திரங்களாகக் கொண்டு உழவுத்தொழில் முறைகளையும் உழவர் வாழ்க்கை முறைகளையும் பொருளாகக் கொண்டு நடித்துக் காட்டப் பெறுவது பள்ளு நாடகம். செய்தொழில்களிலெல்லாம் சீரும் சிறப்புமுடைய உயர்தொழிலான பயிர்த்தொழிலைப் போற்றிப் புகழும் நிலையில் பள்ளு நாடகம் அமைகிறது. சமுதாய உணர்வே இதில் முனைப்பாகக் காணப்படுகிறது. சமய உணர்வு கலக்கப்படுகிறது. இனிய நாட்டுப்புறப் பாடல்களில் தொழிலை யும் வாழ்வையும் படம்பிடித்துக் காட்டுவதுடன் தெய்வங்களை யும் தலைவர்களையும், பணிவுடன் புகழ்ந்து வாழ்வதை பள்ளு நாடகங்களில் காணலாம். எளிய ஆடலாகப் பாமர மக்களின் உணர்வுகளும் செயல்களும் நடித்துக் காட்டப்படுகின்றன. இடத்துக்கு இடம் மாறுபடும் விளக்கங்களைப் பள்ளு நாடகங் களில் காணலாம்.
விழா
விளைவெடுத்து ஓய்ந்து களிக்கும் நாட்களிலும் வெடுத்து தெய்வத்தை வழிபடும் சமயங்களிலும் பள்ளு நாடகங் கள் ஊருக்கு ஊர் நடைபெற்றிருக்கும். ஊர் மக்கள் ஒன்றுகூடி உற்றார் உறவினர் மகிழ இக்களியாட்டங்களை இனிது கண்டு மகிழ்ந்திருப்பர். மிகப்பலவாகப் பள்ளு நாடகங்கள் நடத்தப் பெற்றிருக்கும் என்பதற்குச் சான்றாக,
"நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ணமுடியாது
என்ற பழமொழியைக் கூறலாம். வேடப் புனைவுகளும் காட்சி அமைப்புகளும் மேடை ஒப்பனைகளும் அதிகம் தேவை இல்லாத பள் ளு நாடகத்தைக் கோயில் முன்னாலும் தெரு முனையிலும்