151
வயல் வெளியிலும் அதிகச் செலவின்றி மிக எளிதாக நாட்டுப்புற மக்களால் நடித்துக் காட்டமுடியும்.
பள்ளு நாடகத்தின் கதைப் பொருள் மிகச் சாதாரணமான தாகவே தோன்றுகிறது. வாழ்த்தும் வணக்கமும் பாடி முடித்ததும் பள்ளன் தோன்றித் தன்னுடைய பெருமைகளைத் தானே கூறி மகிழ்கிறான். தான் பின்பற்றும் சமயக் கடவுளை வாழ்த்திப் பணிவதுடன் மற்றவர்களையும் பணிந்து போற்றுமாறு வேண்டு கிறான். மாறுபடுபவர்களைச் சாடுகிறான். அடுத்து அவனுடைய இருபள்ளியரான மூத்த இளைய பள்ளியர் தோன்றுகின்றனர். அவர்கள் தனித்தனியே தங்கள் தங்கள் பிறந்தவிடத்துப் பெருமைகளை அடிக்கிக் கூறுகிறார்கள். அது போட்டியாகவும் மிகையாகவும் தோன்றும். ஆனாலும் மேடைக் காட்சிக்கு இனிமையாகவும் ஏற்புடையதாகவும் அமையும். குடிவுயர்வைக் கூறிக் களிப்பேருவகை உறுவது காண்போர்களுடைய உயர்வைக் குறிப்புணர்த்திக் காட்டுவதாக அமைந்திருக்கும். அது அவர்களைக் களிப்படையச் செய்வது உறுதி. இன்பங் காணச் சென்றோர் தங்களுடைய 'வாழ்வு தெருக்காட்சியாக மெருகேறி வெளிப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருப்பர்.
குடி
பின்னர் நாட்டுவளம், நகர்வளம், குயில் கூவல், மழை வேண்டல், மழைக் குறி தோன்றல், மழை பொழிதல், ஆறு பெருகி ஓடுதல், சிற்றாறுகள் இணைந்து பேராறாகப் பெருக்கெடுத்துப் பாய்தல், ஏரி, குளம் நிறைந்து வழிதல் ஆகிய அனைத்தும் இயற்கையுடன் பொருந்த மிகையாகவும் உவகை யுடன் பாடலாகிப் பாயும். இயற்கையின் நற்கொடையை நம்பி மக்களுக்கு வாழும் நாட்டுப்புற இத்தகைய பாடல்கள் இனிப்பதை விடவும் சுவையாக இனிப்பது வேறெதுவாகவும் இருக்க. முடியாது. அவர்களுடைய நல்வாழ்வுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்ல பாடல்களாக அவை அமைவது உறுதி.
மழை பொழிய நீர்வளம் பெருகும். இனி நிலவளம் கண்டு பயிர்வளம் பெறவேண்டும். அதற்காகப் பண்ணைக்காரன் பள்ளனைத் தேடிவருகிறான். அறுவடைக்குப் பின்னருள்ள ஓய்வுக்காலம் பள்ளனை வீட்டில் முடக்கி வைத்திருப்பது இயற்கை.அவன் இளைய பள்ளியின் இன்ப உறவில் தன்னை மறந்து குடிசைக்குள் பதுங்கிக் கிடக்கிறான். அவனைக் காணாது கோபமுற்ற பண்ணைக்காரன் பலவாறு திட்டுகிறான். அதுவும் இயல்புக் காட்சியாகவே உள்ளது. அதைக் கேட்டதும் பள்ளன் வெளிவருகிறான். தனது செயலை
மறைத்து