168
வழியாகப் படர்ந்து பழமைக்கும் புதுமைக்கும் இணைப்பாக அமைந்து அன்றுமுதல் இன்றுவரை மனிதனுக்கு இன்ப உணர் வையே கொடுத்து வருகின்றன. விழாக்களில் விருந்தளித்து விருப்பத்துடன் அனைவரும் பகை மறந்து ஒன்றுகூடும் வாய்ப்பை அளிக்கும் ஆற்றலும் இக்கலைகளுக்கு உள்ளது. கலைவுணர்வுக் குக் கட்டுப்படுவோர் களிப்படைவரே அன்றிக் கொதித்துக்
குமுறமாட்டார்கள்.
இடத்துக்கு டம் கலைகளும் கலைபழகும் முறைகளும் மாறியமைகின்றன. இருப்பினும் கலையுணர்வில் மாற்றம் இருப்பதில்லை. காரணம் அவை மனித உணர்விலிருந்து இயல் பாகத் தோன்றி வளர்ந்தவை. மனித உணர்வின் ஒருமைத் தன்மையை நாட்டுப்புறக் கலைகள் வாயிலாக நன்கு உணர முடியும். தொழில்கள் மாறுவதினால். அவற்றைக் கொண்டு மலரும் கலைகள் மாறுவது இயல்பே. ஆனால் தொழிலை மதித்து அதனால் கிடைக்கும் பயனைப் புகழ்ந்து கலைப் படுத்தும் தன்மையில் மாற்றம் இருப்பதில்லை. அந்த நிலையில் மனிதவுணர்வு ஒன்றுபடுவதை இத்தகைய தொழிற் கலைகளின் வாயிலாக நன்கு உணரலாம்.
வீரமுணர்த்தும் முறைகள் இடத்துக்கு இடம் மாறிக் காணப்படலாம். ஆனால் முன்னனி வீரனாக முந்திவர வேண்டும் என்ற உணர்வு அனைத்து மனிதனுக்கும் இயல்பாக உள்ளது. வீரவிளக்கம் காட்டும் கலைகள் அனைத்திலும் இத்தகைய உணர்வு மேலோங்கி நிற்பதை எங்குள்ள கலைகளி லும் எளிதாகக் காணலாம். பேயோட்டம் ஆடினாலும் தன் னாட்டமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மனிதனின் இயற்கை. அத்தகைய முன்னேற்ற உணர்ச்சியே கலையை வளர்க்க உதவுகிறது. போட்டி உணர்ச்சியாக அது அமைவது தேவையே. ஆனால் அதுவே காழ்ப்பு உணர்ச்சியாக மாறிவிடுமானால் கலையும் அழிந்து கலைஞனும் தொலைந்து விடுவான். உள்ளத்தில் ஊறும் அன்பையும்
மனித
னின் முன்னேற்ற வேகத்தையும் கலையுணர்ச்சியுடன் கலந்து கலைகள் புனிதமாகப் புலப்படுத்தப்பெறுதல் வேண்டும். இன்பத்தைத் தரவேண்டிய கலைகள் துன்பத்தின் தோற்றுவாய் களாக அமைந்து விடக்கூடாது. நாட்டுப்புறக் கலைகள் இன்பத் தின் உறைவிடங்களாக இருப்பதினால்தான் இன்றுவரையில் நிலைத்துள்ளன