169
கலைப் பயன்
பயனற்ற செயல்கள் பாழ்பட்டு அழிவது உறுதி. நாட்டுப் புறக்கலைகள் நீண்ட நெடுங்காலமாக நிலைத்து வாழ்வதி லிருந்து அவற்றின் சிறப்பும் பயனும் நன்கு விளங்கும். எத்தகைய பயனை மனித இனத்துக்குக் கலைகள்கொடுக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். கலைகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்பதை நன்குணர்ந்தால் அதன் பயனை மிக எளிதாக அறியலாம். விழாக்காலங்களில் தான் அவை பெரும்பாலும் நடைபெறுகின்றன. விழாக்கள் மனிதனுக்கு இன்ப நிறைவை யும் மன ஆறுதலையும் தருவன. இவற்றைப் பெறுவதற்கான நல்ல சூழலை உருவாக்கப் பலவி தமான கலைகளை விழாக் களுக்குத் தொடர்பான முறையில் சுவையாக மக்கள் நடத்து கின்றனர். இதிலிருந்து கலைகளின் முக்கியமான பயனாக இன்பமளித்தலைக் கூறலாம். வாழ்க்கைச் சிக்கலில் பின்னப் பட்டு வருந்தும் மனிதனுக்கு இன்பமான ஆறுதலை இனிதாகக் கொடுக்கவேண்டியது தேவை. கலைகள் இன்பத்தை மிகுதி யாகத் தருகின்றன. அந்த இன்பத்தால் மனிதனின் மனம் ஆறுதலடைந்து தேறுகிறது.
அடங்கிக் கிடக்கும் திறமைகள் கலைகளின் வாயிலாக வெளிப்படுகின்றன. உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்களை அகலத் திறந்து அரிய திறமைகளின் வாயிலாக உணர்வுகளை வெளிப் படுவதற்குக் கலைகள் துணை செய்கின்றன. இந்த நிலையில் கலைகள் மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளின் வடிகால்களாக வும் உருவத் தோற்றங்களாகவும் உள்ளன. வடிகாலின்றித் தங்கும் தண்ணீர் உடைப்பெடுத்து வீணாவதுடன் அழிவைச் செய்வதையும் காணலாம். அதுபோன்று புலப்படுத்த வாய்ப் பின்றிப் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகள் நோக்கமின்றி வெளிப் படுமாயின் வீணான துன்பங்களுக்கு வழிவகுத்து விடும். கலை கள் அவற்றைக் கட்டுப்பாட்டுடன் வெளிவரச் செய்து இன்ப விளைவுக்கு முறையாகப் பயன்படுத்துகின்றன. அதனால் கலைஞனும் காண்போனும் இன்பமடைந்து களிக்கின்றனர். தீமைக்கு வழியாகும் உணர்ச்சி முடக்கத்தைத் தடுத்து நன்மைக்கு வழிவகுக்கும் நல்ல செயலைக் கலைகள் ஆற்று கின்றன.
எல்லை மீறிய இன்பம் பலவித தமான தொல்லைகளுக்குக் காரணமாகி விடுவதுண்டு. கள்ளுண்டு மயங்குவோன் இன்ப வெறியில் தீய செயல்களைச் செய்யத் துணிவதைக் காணலாம்.