உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

அந்நிலையில் அவனுக்கு நல்லறிவு கொடுக்கவும் முடியாது. அவனால் கொள்ளவும் முடியாது. ஆகையினால் இன்பம் தரும் மதுவைக் கடிந்து சான்றோர் கூறுவர். கலையின்பம் கட்டுக்கு அடங்குவது நல்லறிவை ஏற்றுக் கொள்ளும் நிலையுடையது. ஆகையினால் இன்பம் கொடுப்பதுடன் இயன்ற அளவு அறிவையும் மக்களுக்குக் கொடுத்து நெறிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் அறிவுரைக்கு அங்கு சிறப்பிடம் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது, நாட்டுப்புறக் கலைகள் நல்ல முறையில் அளவுடன் அறிவுக் கருத்துக்களைக் கொடுக்கத் தவறவில்லை. இது கலைகளின் முக்கிய பயனாக அமையாது தேவையான துணைப் பயனாக அமைகிறது.

சமய்

பெரும்பாலான கலைகள் சமயச் சார்புடன் நடைபெறு கின்றன. சமய உணர்வு மனிதனைச் சமனப்படுத்தி நல் வாழ்வுக்கு வழி காட்டும். தீயதைத் தடுத்து நல்லதை தூண்டும். அன்பைப் பெருக்கி அழிவைத் தடுக்கும். மெய்யான உணர்வு மனித இனத்தின் இன்ப வாழ்வுக்கும் அமைதிக்கும் வழி காட்டவேண்டும். மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இன்றி அன்பு உறவுடன் இணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்ய முயல்வதே நல்ல சமயத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். சமயச் சார்புடைய கலைகள் மக்களுக்கு இத்தகைய நன்மையை இயல்பாகச் செய்யத் தவறவில்லை. தவறுமாயின் அது புறத்தூண்டலுக்கு உட்பட்டுத் தன்னுடைய கலைத் தன்மையை இழந்துவிட்டதாகக் கருதலாம்.

நாட்டின் பண்பாட்டை நல்லமுறையில் விளக்கிக் காட்டும் இயங்கு கருவிகளாக நாட்டுப்புறக் கலைகள் விளங்குகின்றன். நாட்டு நடப்புக்கள், மரபுமுறைகள் அனைத்தையும் காலத்துடன் இணைந்து புலப்படுத்தும் அளவு மானிகளாகவும் அவை அமை

கின்றன. காலவோட்டத்தில் கலைகளுடன் இடையிடையே

வந்து ஒட்டிய கூறுகளை ஒதுக்கி முதல் நிலையில் அவை அமைந்த நிலையை நன்றாக ஆய்ந்து உண்மையான மனிதப் பண்பாட்டை அறிய முடியுமாயின் உலக. முழுவதிலுமுள்ள நாட்டுப்புறக் கலைகளுக்கு இடையில் வியக்கத்தக்க அளவு ஒற்றுமை இருப்பதை உறுதியாகக் காணமுடியும். மனித இனத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை உறுதிப்படுத்த அத்தகைய கண்டுபிடிப்பு மிகவும் உதவும். பல்வேறு காரணங்களால் தங்களைத் தாங்களே பலவிதமாகக் கூறுபடுத்தி ஏற்றத் தாழ்வு களைக் கற்பித்து சிக்கல்களையும் சீர்கேடுகளையும் அரவணைத்து அவதியுறும் மனிதயினம் என் னம்: என்றாவது ஒருநாள்