உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




171

தன்னுடைய தோற்ற ஒற்றுமையினையும் பண்பாட்டு ஒப்புமை யினையும் நாட்டுப் புறவியல் ஆய்வின் வாயிலாக நன்றாக உணரும் காலம் வரும் என்று நம்பலாம். அது பலவிதமான தேவையற்ற உலகச் சிக்கல்களை முடிச்சவிழ்த்து சீர்படுத்தி விடும். அதன் பயனாக மனித இனம் இன்று வாழ்வதைவிட

நன்றாக வாழ வழிபிறக்கும். மனிதனுக்கு மனிதனும்,

நாட்டுக்கு நாடும் உறவு வலிவடையும். உதவும் பண்பு மிகும். இவ்வுலகில் தோன்றியுள்ள மனித இனம் அன்பு உறவால் பின்னப் பட்டு ஒருங்கினைந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அமைதியான இன்ப வாழ்வு வாழும் பக்குவத் தைப் பெறுவதற்கான ஒருமித்த பண்பாட்டுணர்வை நாட்டுப் புறக் கலை ஆய்வு கொடுக்க வல்லது என்பதை ஆழ்ந்து சிந்தித்துக் காண்போர் உணர்வார்கள். தனித்தனிப் பண்பாட்டு உணர்வுகளைப் புலப்படுத்தும் கலைகள் அனைத்துக்கும் தொடக்கமான உணர்வு ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்.

திருந்திய கலைகளுக்கு உதவல்

பல திருந்திய கலைகளுக்கு (Classical Arts) நாட்டுப்புறக் கலைகள் பெருந்துணையாக இருந்துள்ளன. இத்தகைய கலைகள் நாட்டுப்புறக் கலைகளின் திருந்திய வடிவங்களாகவே உள்ளன. பண்டைய கூத்துக்களிலிருந்தே நாடகங்கள் தோன்றி யுள்ளன. பல விதமான ஆடல்கள் நாடகங்களில் இணைந்துள்ள தைக் காணலாம். தஞ்சையிலுள்ள கோலப் பாடல்களும், கோவையிலுள்ள ஒயிலாட்டப் பாடல்களும் அண்ணாமலை ரெட்டியாரின் திருந்திய காவடிச் சிந்து பாடல்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன. நாட்டுப்புற மக்களின் நாடகங்

களான் பள்ளு, குறவஞ்சி, நொண்டி, குளுவம், கூத்து ஆகியவற்றிலிருந்து இலக்கியங்களும், திருத்தமுடைய நாடகக் கலையும் தோன்றி வளர்ந்துள்ளன.

கலைகளிலும்

உள்ளன.

உண்மையான உணர்வுகள் நாட்டுப்புறக் கலைகளில் இருப்பது போன்றே திருந்திய வடிவமும், அமைப்பும், நடத்தும் முறையும் மாறியிருக்கின்றன. விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் வகுக்கப் பெற்றுள்ளன. நாகரிக மக்கள் விரும்புவதினால் உலக அரங்கில் அவை மதிப் படைந்து விட்டன. நாட்டுப்புறக் கலைகள் அன்றிலிருந்து இன்று வரை உயிர்த் துடிப்புடன் மனிதனின் உண்மையான