இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172
உணர்வுகளை உலகுக்கு விளக்கிக் காட்டி எளிய மக்களிடம் கிறப்பாக வாழ்ந்து வருகின்றன. என்றும் அவை வாழ்ந்து மக்களுக்கு இன்பம் கொடுப்பது உண்மை.
நாட்டுப்புறக் கலைகளைப் பல கலைக் குடும்பங்கள் இன்று நன்கு ஆதரித்து வருகின்றன. தனித் தனிக் கலைகளில் பயிற்சி யுற்று பலர் இந்தக் கலைகள் மூலம்.
வருகின்றனர்.
மதுரையில் வாழும்
கலைமாமணி ஓம் பெரிய சாமியின் கலைப்பணி பாராட்டுவதற்கு உரியதாகும். ஒரு கலைப்பள்ளியைத் தொடங்கிப் பலருக்குக் கலைப்பயிற்சியும் கலையார்வமும் ஊட்டி வருகிறார். காவடி, கரகம், பொய்க்கால் குதிரை போன்ற ஆட்டங்கள் அவருடைய அரவணைப்பில் சிறந்து வளர்கின்றன. பல கல்லூரி மாணவ மாணவியரும் இத்தகைய கலைகளில் பயிற்சிபெற்று வருகின்றனர். நாட்டுப் புறக் கலைகளுக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதை உணர்ந்து அனைவரும் மகிழலாம்.