15
யிருக்கலாம். பருவமாற்றத்தை உணர்த்தவும். வாழ்க்கைப் பருவங்களை நினைவுபடுத்தவும், நம்பிக்கைகளை உறுதிபெறச் செய்யவும், நல்லவற்றை அறிவிக்கவும், வாழ்வை நெறிப் படுத்தவும், சமூகவுணர்வை வலிமை பெறச் செய்யும், பாரம்பரைப் பண்பாட்டுணர்வைக் காக்கவும் கலைகள் மூலம் முயன்றிருக்கலாம். காழ்ப்புணர்வும் பகையுணர்வும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுவன. இனங்கள் ஒன்றுக்கொன்று மோதி முரணாவது இயல்பான நிலைகள். இத்தகைய நிலையில் மனிதன் தான் உடல்வலிமையைப் பெருக்கிப் பேராற்றலைக் காட்ட விரும்புவது இயல்பேயாகும். இத்தகைய இயல்பிலிருந்து சில கலைகள் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும்.
அன்பைப் பெருக்கி மனிதவுறவை வளர்க்கவும் சில கலைஞர் கள் விரும்பி இருக்கலாம். இந்நோக்கம் உடையவர்கள் மனிதனுக்கு அடக்கவுணர்வை ஊட்டி நற்பண்பை அறிவுறுத்தி இருப்பர். கலைகளும் இத்தகைய உணர்வை மக்கள் மத்தியில் பரப்பும் அரிய நோக்கத்துடன்தான் எழுந்திருக்க வேண்டும். அறிவுறுத்தும் நோக்கம் பெரும்பாலும் கலைகளுக்குள் வெளிப் படையாகப் புலனாகாது அடங்கியே இருக்கும். ஆயினும் அறிவுறுத்தும் கருத்துகள் அழுத்தம் பெற்றுப் புலனாகக் கலை களில் இடமிருக்கும். இன்பவுணர்வில் மிதந்தவாறே மக்களுக்கு அறிவுபுகட்டும் கருவியாக நல்ல கலைகள் விளங்குகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சமய உணர்வை அழுத்த மாகப் புலப்படுத்தும் கலைகளே மிகுதியாக உள்ளன. பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை எந்தவிதமான இயக்க ஆற்றலுக்கும் அடங்காது நாட்டுப்புறக் கலைகள் மக்கள் மத்தியில் சமய உண்மைகளை எடுத்துக் கூறிக் கொண்டே வரு கின்றன. மக்களின் இயல்பான மனப்போக்கு அமைவதற்குத் தக்கவாறே கலைகளின் நோக்கமும் தன்மையும் அமைகின்றன. அறிவியலுக்கு அப்பாற்பட்டவற்றையும் சமய நம்பிக்கைத் தளத்தில் நின்று உறுதிப்படுத்த நாட்டுப்புறக் கலைகள் சற்றும் தயங்குவதில்லை. அவற்றால் உணர்த்தப்படும் கருத்துக்களை அறிவுக் களத்திலிருந்து காண்போர் பொருளற்றதாகவே பல இடங்களில் காண முடியும்.
திராவிட நாகரிகம் மிக முந்தியது என்றும் அது ஆரியர் களுக்கு முந்திய பழமை விரும்பி மக்களுடையது என்றும் ஆய்வறிஞர் நம்புகின்றனர். அந்த மக்கள் தங்களது பழமையான