16
பழக்க வழக்கங்களைப் பேணிக் காக்கும் இயல்புடையவர்கள். ஆனாலும் அவர்களுடைய வழக்க முறைகள் இன்றைய நாகரிக எண்ணங்களின் தொடர்பால் சில மாற்றங்களை அடைந்து காணப்படுகிறது இவர்களுடைய பழமை காக்கும் பண்பு கலைப் படைப்புகளிலும் காணப்படுகிறது. பெரும்பாலான கலைகளின் உண்மையான நோக்கம் காலம் காலமாக மாறாமல் ஒன்றாகவே உள்ளது. இறைவனிடம் மழையை வேண்டி முன் காலத்து மக்கள் ஆடிய ஆட்டத்தையும் நடித்த கூத்தையும் அதே நோக்கத்துடன் இன்றைய நாட்டுப்புற மக்களும் நம்பிக்கை
யுடன் கையாள்வதைத் தமிழ்நாட்டில் பல பகுதிகளில்
காணலாம்.
கலை
ஆடல் பாடல் போன்ற கலைகளுக்கு மிகுந்த சிறப்பு தமிழ் நாட்டில் பன்னெடுங் காலமாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட கலையைக் குறிப்பிட்ட சாரார் கையாண்டு. தங்களுடைய திறமையை அதில் காட்டியுள்ளனர். சங்க காலத்தில் பாடற் கலைக்குப் பாணரும் கூத்துக் கலைக்குக் கூத்தரும் இருந்ததைக் காணலாம். இன்றும் கணியான் ஆட்டத்துக்குக் காணிக்காரரும் தேவராட்டத்துக்குக் கம்பளத்து நாயக்கரும் உரிமை பாராட்டி ஆடுவதைக் காணலாம். இத்தகைய குடியினரிடம் ஒருவகையான தனித்துவ ஆற்றல் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதைப் புனிதமாகக் கருதினர். ஆகையினால் பலவகையான விரதங்கள் செய்த பின்னரே நிகழ்ச்சியைத் தொடங்குகின்றனர். இதிலிருந்து புனிதமாகக் கலைச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து மக்களிடம் இருந்ததை அறிய முடிகிறது. 'இக்கலை'களின் பயனால் சில அரிய செயல்களைச் சாதிக்க இயலும் என்று நம்பி இருக்க வேண்டும். இறையாற்றலுடன் கலையை இணைத்துக் கண்டதினால்தான் இத்தகைய எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். இதிலிருந்து சில கலைகளின் நோக்கத்தை அறிய லாம். பேராற்றலையும் புனிதத்தையும் அடிப்படையாகக் கொண்டு பல நாட்டுப்புறக் கலைகள் தோன்றியுள்ளன.
8. Projesh Banerj, the Fulk-dances of India, Kita istan (Allahabad, 1959) P. 9.