உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




19

சாதி சமய பிரிவுகளின் பயனாக மக்களின் பழக்க வழக்கத்திலும், நம்பிக்கையிலும், பண்பாட்டிலும் வேறுபாடுகள் தோன்றி யுள்ளன. அவற்றின் காரணமாக அவர்களின் கலை வழக்கங் களும் கலையின் அமைப்பு முறைகளும் மாற்றமடைந்து தோன்று கின்றன. தமிழ்நாட்டில் பழங்குடி மக்களும் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கை முறை முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது பழங்குடியினரிலும் பல இனத்தவர் இருக் கிறார்கள். ஆகையினால் அவர்களுடைய கலைகளும் வேறுபாடு களுடன் அமைகின்றன. அனைத்தையும் மனத்திற் கொண்டு தமிழக நாட்டுப் புறக் கலைகளைக் கணக்கிட்டு வகைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிப்படை உணர்விலும் முக்கியமான நோக்கத்திலும் தமிழருடைய கலைகள் ஓரளவு ஒற்றுமை உடையனவாகக் காணப்படுகின்றன. இதனை ஆதரவாக கொண்டு அனைத்துக் கலைகளையும் ஒன்றாக இணைத்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமை கூறுகளை அறிந்து வகைப்பாடு செய்ய முயலலாம். காலவோட்டமும் பிறபண் பாட்டினரின் கலைத் தொடர்பும் தமிழ் நாட்டுக் கலைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளன. தமிழருக்கே உரிய நாட்டுப்புறக் கூறுகளைக் கொண்டு செய்வதே சரியாகப்

கலைக்

படுகிறது

பல்வகைப் பாகுபாடுகள்

வகை

மிக

தொகையைக் கொண்டு ஈடுபடும் கலைஞர்களின் எளிதாகப் பாகுபடுத்தலாம். ஒருவரே இயற்றும் கலையைத் தனியர்கலை என்றும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து நடத்தும் கலையைக் குழுவினர்கலை என்றும் கூறலாம், மயிலாட்டம்,பொய்க்கால் குதிரையாட்டம், கரடியாட்டம், இன்னிசைப் பொழிவு (இசையுடன் கதை கூறல்), நொண்டி நாடகம் போன்றவை தனியர் கலைகளாக அமைகின்றன. வில்லுப்பாட்டு, தேவராட்டம், நாட்டார் நாடகம் (தெருக் கூத்து), உடுக்கடிப்பாட்டு, காமண்டி கொளுத்தல், ஆலியாட்டம். கணியானாட்டம் போன் றவை குழுவினர் கலைகளாக உள்ளன. கரக ஆட்டம், காவடியாட்டம் போன்றவை தனியர் களாகவும் சில சமயம் குழுவினர் கலையாகவும் நடத்தப்படு கின்றன. மிக அருகிய நிலையில் பொய்க்கால் குதிரை யாட்டத்தை ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து ஆடுகின்றனர் ப பெரும்பாலும் இசைக்குத் தக்கவாறு ஒரு ஆணே இவ்வாட்டத்தை நிகழ்த்துவது வழக்கம். ஆகையினால் இது தனியர் கலைக்குள் அடக்கப்படுவதே குறையாகக் கருதப் படுகிறது.

கலை