உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

நிகழ்ச்சிகளும், பஞ்ச பூதங்களும், இயற்கைக் காட்சிகளும் பல வித உருவமைப்பை மனிதனின் கற்பனை ஆற்றலால் பெறு கின்றன. தன்னை உயர்வாக மதித்துள்ள மனிதன் தன் உருவங் களைப் படைக்கிறான். ஒவ்வொரு உணர்வுக்கும் ஏற்றவாறு தோற்றங் கொடுத்து இறைவுருவங்கள் அமைக்கப் படுகின்றன. அச்சவுணர்வில் தோன்றிய உருவங்களைக் கண்டதும் அத்தகைய உணர்வு ஏற்படும் நிலையில் அவ்வுருவங்கள் செய்யப்படுகின்றன. இயற்கையின் சாயலும் இணைக்கப் பெறுகின்றது. தெய்வங் களை மகிழ்வித்து அமைதியடையச் செய்யும் நிலையில் விழாக்கள் பலவாறாக நடத்தப் படுகின்றன. மனித மனத்தில் பல்வேறு விதமாக எழும் சிந்தனைகளே இவ்விதமான விழாக்கள் நடத்தக் காரணங்களாக உள்ளன. சுருங்கக் கூறுவதாயின் n சமயக் கருத்துக்களை வலியுறுத்தவும் இறையென நம்பியதை அமைதிப் படுத்தவும் ஆபத்துக்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் மனிதன் பலவகையான சமய விழாக்களை நடத்துகிறான். இத் தகைய சமய விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் பல இடம் பெறு கின்றன. மனிதனின் சமய நம்பிக்கைக்கு அவை பொருந்தும் தன்மையில் நடத்தப்படுகின்றன.

கற்பனையால் உருவாக்கப்பட்ட கடவுளருக்குக் கதைகளும் கருத்துரையாடல்களும் கற்பிக்கப் பட்டன. இயற்கை நடப்பு களுக்குக் காரண காரியங்கள் கூறப்பெற்றன. இறப்பு காலனாகப் பெயர் பெற்று அதற்குரிய கதையாக நீண்டு உருவாகிக் கண்ணுக்குக் காட்டப்பட்டு விழாக்கள் நடத்தப் பெற்றுப் பலரால் வணங்கப் படுகிறது. அழிக்கும் நெருப்பும், பொங்கும் கடலும், வீசுங் காற்றும், இடித்து அலறும் இடியும், கொத்திக் கொல்லும் பாம்பும் பெற்றன. விழாவெடுத்துக் கொண்டாடப் பட்டது. இத்தகைய கொண்டாட்டங்களில் நடத்தப் பெறும் கலைகளையும் சமய நெறிகளைப் புலப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்ட கலைகளையும் சமயச்சார்பு கலைகள் என்று அழைக்கலாம். நாட்டுப் புறத்தில் இத்தகைய சமயச் சார்பு கலைகளே மிகுதியாக நடத்தப்பட்டு வருகின்றன. சமயவுணர்வும் அச்சவுணர்வும் மிக்க பாமர மக்கள் இத்தகைய கலைகளுக்குப் பேராதரவு கொடுப்பதுடன் பெருமதிப்பையும் கொடுத்து வளர்க்கின்றனர். சமயச் சார்புக் கலைகளைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம்

வழிபாட்டுக் கலைகள்

இறைவழிபாட்டுக்கு உதவுமாறு பலவிதமான நாட்டுப் புறக்கலைகள் நடத்தப் பெறுகின்றன. அவை பெரும்பாலும்