உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




25

25

ஊர்த் தெய்வங்களுக்கு விழா நடத்தும் போது நடைபெறு கின்றன. குறிப்பிட்ட தெய்வங்களுக்குக் குறிப்பிட்ட கலைகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அனைத்து சமயச் சார்புக்கலைகளும் இறைவணக்கத்துக்காகவே நடைபெறு கின்றன இருப்பினும் அவைகளுக்குள்ளும் நுட்பமான வேறுபாடுகள் இருப்பதைக் கண்டு மேலும் அவை பிரிக்கப்படு கின்றன. இத்தகைய கலைகள் விழாக் காலங்களில் கோயில் மூன்றிலிலும் அல்லது தெய்வங்கள் தெரு உலாக்கள் வரும் போது தெருக்களிலும் நடத்தப்படுகின்றன. ஆலயங்களுக்குச் செல்லும் வழியிலும் ஊர்ச் சந்திகளிலும் கலைகள் நடைபெறுவது உண்டு. மனிதன் தன்னை வருத்தியும் உருமாற்றியும் இத்தகைய வணக்கக் கலைகளை இயற்றுகிறான். அதன் முக்கிய நோக்கம் பெறுவதேயாகும். இறையருளைப் இத்தகைய கலைகளை நடத்துவதற்கு முன் பலவிதமான நோன்புகள் செய்வதும் வழக்கம் கலைஞன் தன்னைப் புனிதப் படுத்துவதற்காக இத் தகைய நோன்புகளைக் கையாளுவதாகக் கருதலாம்.

இசைக் கருவிகளையும்

ஆடல்

வழிபாட்டுக்கு உரிய கலைகளை மூன்று விதமாகப் பிரித்துக் காணலாம். அவை மனிதவுரு, விலங்கினவுரு, பூதவுரு ஆகும். கலைகள் இத்தகைய மூன்றுவகை உரு அமைப்பில் விழா நடைபெறும்போது நடத்தப்படுகின்றன. வேறுவேறு விதமான கொண்டு முறைகளையும் இவ்விதக் கலைகள் நடத்தப்படுகின்றன. பலவிதமான திறமைகளை இந்தக் கலைகள் மூலம் மக்களுக்குக் காட்ட கலைஞன் நாடுவதினால் இவை நாளுக்கு நாள் கலைத் தன்மையில் வளர்ந்து பலவகையில் மாற்றமடைந்து உள்ளன. தொடக்கத்தில் அவைகளின் தோற்றம் மிக எளிமையானதாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

மனிதன் தன் உருவத் தோற்றத்தைப் பெருமையாகக் கருதி அதற்கே சிறப்பிடம் கொடுத்து நடத்தும் கலைகள் மனிதவுருக் கலைகளில் அடங்கும். சில உயிரினவுருவங்களுக்கு உயர்வு தந்து அவற்றைக் கொண்டு நடத்தும் கலைகளை உயிரினவுருக் கலைகளாகக் கருதலாம். பூதவுருவங்களை அச்சம் தரும் முறையில் அமைத்து அவற்றைத் தாங்கி ஆடுவதைப் பூதவுருக் கலைகள் என்று அழைக்கலாம். புராணக் கதைகளில் காண்பவர்களைக் கற்பனை ஆற்றலால் உருவாக்கி இத்தகைய பூத உருவங்களை மனிதன் படைத்துள்ளான். ஆயினும் இறை வணக்கமே முக்கியக் கூறாகக் காண்பதினால் இவற்றை இத்தொகுதியில் அடக்கி விளக்கம் தரப்படுகிறது.