உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

இவ்வாறு பாடல் நீண்டு கொண்டே செல்கிறது. பாடல் உள்ளத்துள் எழுந்த உணர்ச்சியில் வெளிப்பாடாக ஊறிப்பாய் வதைக் காண வேண்டும். புரிந்தோ புரியாமலோ சொற்கள் ஒலிக் கோர்கையாக அமைகின்றன. பொருளும் உணர்ச்சிக்குத் தக்கவாறு பொருந்திச் சுவை கூட்டுகிறது ஆற்றொழுக்கான நடை இயல்பாக அமைவதே நாட்டுப்புறப் பாடல்களின் தனிச் சிறப்பாகக் காணப்படுகிறது.

குழந்தையை அரசனாகவும் தெய்வமாகவும் தலைசிறந்த மனிதனாகவும் மதித்துப் பாடும் பாடல்களும் உள்ளன. வருங்கால வாழ்வில் குழந்தை சிறப்புற்று என்பது வாழ வேண்டும் அனைத்துத் தாயரின் அயராத விருப்பம். குறையில்லாத அன்பும் நிறைந்த பற்றும் பாடும் பாடலில் குமிழியிட்டுப் பாய்வதைக் கண்டு இன்புறலாம். உலகத்திலிருக்கும் இனிமையான பொருட் களை எல்லாம் குறிப்பிட்டுக் குழந்தையை வாழ்த்தத் தாயுள்ளம் நாடுகிறது.

'என் கண்ணே மணியே கருத்துள்ள கண்மணியே பொன்னே மயிலே என் கட்டிக் கரும்பே

தேனே பாலே என் திகட்டாக் கனியே மானே மதியே என் மரிக் கொழுந்தே குத்து விளக்கே என் கோபுரமே நீயுறங்கு'

ஒவ்வொரு

வெல்லக்

சொல்லும் அன்பில் குழைத்தெடுத்த கட்டிகளாக இனிக்கின்றன. நிறைந்த மனத்தில் நினைத்தவற்றை யெல்லாம் நீண்ட பாடலாக்கி மகிழும் தாயின் அன்பு உள்ளத்துக்கு இப்பாடல்கள் நல்ல சான்றாக அமைகின்றன. குழந்தையின் பேரில் தனக்கிருக்கும் தனியுரிமையை 'என்' என்ற சொல்லால் அடிக்கு ஒரு தரம் உறுதிப் படுத்த அந்தத் தாய் விரும்புவதைக் காணலாம்.

தாயின் அன்புக்கு அளவே இல்லை. தனக்கோ தன் பொருளுக்கோ எத்தகைய அழிவு நேரிட்டாலும் அதைப் பொருள் படுத்தாது தன் குழந்தையின் இன்பத்தையும் நல்வாழ்வையும் நாடுகிறாள் அருமை தாய். தாலாட்டில் இதைக் காட்டிப் பாடுகிறாள்.

'பாலும் அடுப்பதிலே பாலகனும் தொட்டிலிலே

பால் பொங்கிப் போனாலும் பாலகனை அழவிடுவேனோ சோறும் அடுப்பதிலே சோழராசன் தொட்டிலிலே

சோறு பொங்கிப் போனாலும் சோழராசனை அழவிடுவேனோ'