37
இவ்வாறு பலவாறாகப் பாடும் தாயின் மனநிலையைக் கண்டு உணர வேண்டும். தாலாட்டுப் பாடல்கள் குழந்தையை அன்புப் பிடியில் சிக்க வைத்து அருமையாக வளர்க்க உதவுகிறது.
வையை வளநாடான மதுரையைக் குறிப்பிட்டு அங்கு வாழும் ஒரு தாய் தன் குழந்தையை மனமினிக்க வாய்மலர்ந்து தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறாள்'.
'வையை வளநாடு வடக்கிருக்கும் சோணாடு
சேரணாடு பார்க்க வந்தஎன் சொகுசான பசுங்கிளியே பசுங்கிளியை யாரடுச்சா, யாரடுச்சா நீயழுக!'
தன்
அழுகையை நிறுத்த இவ்வாறு பாடிய அன்புத்தாய் அருமைக் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டுகிறாள். பலவாறாகப் பாராட்டும் போது குழந்தையின் மாமனான தன் அண்ணனை நினைக்கிறாள். தாயின் கற்பனைச் சரடு முறுகித் தாலாட்டுக் கவிதை உருவாகி நீள்கிறது.
‘வெள்ளி ஒளியோ மேகத்து மின்னொளியோ தங்க ஒளியோ தாய்மாமன் பொட்டொனியோ பிச்சிச் சரமோ பின்னலோடும் பூச்சரமோ முல்லை யரும்போ வாசமுள்ள மரிக்கொழுந்தோ அல்லி மகனோஎன் அண்ணனுக்கு ஆசைமருமகனோ கொம்புக் கிளியோ கோதுபடாச் சர்க்கரையோ
வம்புக்கு அழுகாதேஉன் வாயெல்லாம் தேனொழுகும்!
மாமன் புகழ்பாடுவது தாலாட்டுப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. தாயானவள் தன் பிறந்த வீடு விட்டுப் புகுந்த வீடு சேர்ந்தவள். அண்ணனின் அன்பில் வளர்ந்தவள் கணவனின் இணைப்பில் வாழ்கிறாள். அண்ணனின் நினைப்பு அடிக்கடி அவளுக்கு வருவது இயல்பே. அதனைப் புலப்படுத்தும் வாயிலாகத் தாலாட்டுப் பாடல்கள் அமைகின்றன. குழந்தைக்கு மாமனைப் பற்றிக் கூறும் நிலையில் தாயின் அண்ணன் பற்று பீறிடுகிறது.
'குதிரையை அலங்கரித்துக் குதிரைமுகம் சிங்காரித்து குதிரைக்குத் தீனிவைக்கும் கோவலரே உங்கள் மாமன் யானையை அலங்கரித்து யானைமுகம் சிங்காரித்து யானைக்குத் தீனிவைக்கும் அரசர்களே உங்கள்மாமன் வாசலிலே வன்னிமரம் - என் வம்சமே இராசகுலம் இராசகுல மாமனுக்கு-நீ இயைந்த மருமகனே'
(2) இப் பாடல்கள் மூன்றும் மதுரை சேர்ந்தவை.
மாவட்டத்தைச்