உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




41

சடங்குகளும் இதனை நன்கு விளக்குகின்றன. வாழ்க்கையின் இன்பக் கட்டத்திலும் துன்பத்தைப் பற்றி அவர்களால் நினைக் காமல் இருக்க முடியவில்லை. இது நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை அறிவு முதிர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது. அன்பும் அனுபவமும் இவ்வாறு நடக்கும் கலைகளுக்கும் சடங்கு களுக்கும் தூண்டுதலாக அமைகின்றன.

ஒப்பாரிப் பாடல்கள்

மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் இயற்கையின் செயல்களாகும். பிறப்பது இன்பத்துடன் வரவேற்கப்படுகிறது. இறப்பது துன்பத்துடன் வெறுக்கப்படுகிறது. முன்னது தோற்ற மாகவும் பின்னது மறைவாகவும் இருப்பதினால் இரண்டும் இரு துருவ வேறுபாட்டுடன் மக்கள் மனதில் பதிகின்றன. வாழ்கை பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நிறைந்தது. வாழ்வின் தடம் மனித மனங்களை எவ்வாறு பாதிக்குமோ அவ்வாறு அவ்வாழ்வுக்கு உரிய மனிதன் மதிக்கப் படுகிறான். பிறருடன் இறந்தவருக்கு உள்ள உறவின் அளவைக் கொண்டு அவருடைய மறைவினால் ஏற்படும் துன்ப அனவைக் கணக்கிட்டுக் காணலாம். நெருங்கிய உறவு நெடுந்துயரையும், இணங்கிய உறவு இயலாத துயரையும், தூரவுறவு குறைந்த துயரையும் கொடுக்கும். பிறரின் நலம் நாடித் தன்னலம் பேணாத பெரியோரின் மறைவே மிகப்பெரும் துன்பச் யாகப் பலரை வருந்தியழச் செய்யும்.

சுமை

இறந்தோரை நினைத்து ஏங்கியழும் பாடல்களை ஒப்பாரிப் பாடல் என்று கூறுவர். அவற்றின் திருந்திய வடிவங்களாகக் கையறுநிலைப் பாடல்கள் அமைகின்றன. நாட்டுபுற மக்களிடையே இத்தகைய ஒப்பாரிப் பாடல்கள் மிக அதிகமாகப் பாடப் படுகின்றன. பெற்ற அன்னை இறந்து விடுகிறாள். பிள்ளைகள் அழுகிறார்கள். பாடல் நாட்டுப்புற அமைப்பில் ஊறி வழிகிறது.

'என்னைப் பெத்த அம்மா !

கல்லுறுத்த மண்ணுறுத்த கானகம் போய்ப் படுத்தாயே ஏந்தி யெடுத்துநீ இடது கொங்கை பாலூட்டி வாரி யெடுத்துநீ வலது கொங்கை பாலூட்டி

வாயார முத்தமிட்டு வண்ணவண்ண திலகமிடுவாயே என்னைப் பெத்த அம்மா!'