42
உருக்கமான பாடலாக இது இன்னும் விரிவாக வளர்கிறது, நெருக்கமான உறவால் ஏற்பட்டுள்ள அவலம் படர்ந்துள்ளது. அருமையாக வளர்த்த அன்னையின் நினைவுகள் அலைமோது கின்றன. இரும்பு மனத்தையும் இளகச் செய்யும் தன்மையுடைய தாக இப்பாடல் விளங்குகிறது.
இறப்புச் சடங்குகளும் ஒப்பாரிப் பாடல்களில் இடம் பெறு கின்றன. 'வாய்க்கரிசி' போடும் வழக்கம் பாடலில் முளையீடு வதைக் காணலாம். தாங்க முடியாதத் துன்பச் சுமையுடன் அன்னையின் பிணத்துக்கு 'வாய்க்கரிசி' போடப்படுவதைப்
பாடல் உணர்த்துகிறது. 'ஆசை அம்மா!
அள்ளித் தந்த கைமறந்து- நாங்கள் அள்ளி விட்டோம் வாய்க்கரிசி ! சோறு தந்த கைமறந்து - நாங்கள் சொரிந்து விட்டோம் வாய்க்கரிசி ! பிடித்து ஊட்டும் கைமறந்து - நாங்கள் பிடித்து விட்டோம் வாய்க்கரிசி
இந்த உருக்கமான பாடலைக் குமரி மாவட்டத்தில் கேட்கலாம்- மதுரை மாவட்டத்தில் தாயை இழந்தோரின் அவலக் குரல் இவ்வாறு கேட்கும்.
'ஏகாந்த மல்லி பூப்பூக்க கொடிமுருங்கை பிஞ்சு விட கோவலர் பெற்ற மக்கள் கொழுந்திலேயே தாயிழந்தோம் சீரகம் பூப்பூக்க சிறுமுருங்கை பிஞ்சு விட
சீமராசா பெற்ற மக்கள் சிறு சுலேயே தாயிழந்தோம் மாடு மனஞ்சலித்தால் மந்தையிலே மேய்ந்தடையும் கோழி மனஞ்சலித்தால் குப்பையிலே மேய்ந்தடையும் மக்கள் மனஞ்சலித்தால் வையையாறு தேடணுமே. திருச்சிக் கதவுக்கும் திண்டுக்கல் பூட்டுக்கும்' தீங்கில்லை எனறிருந்தேன்-இன்று
திருச்சிக் கதவுமில்லை திண்டுக்கல் பூட்டுமில்லை தீங்கு வந்து நேரிட்டதே
பழனிக் கதவுக்கும் பட்டணத்துப் பூட்டுக்கும் பழுதில்லை என்றிருந்தேன் - இன்று
பழனிக் கதவுமில்லை பட்டணத்துப் பூட்டுமில்லை
பழுது வந்து சேர்ந்திட்டதே
இவ்வாறு தாயின் இழப்பு அழுகைப் பாடலாக படர்கிறது. பாடலில் அவலப் பொருளும் அருமையான கருத்தும் அழுத்தம் பெற்றுள்ளன.
(4) மதுரை மாவட்டப் பாடல்