இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மக்கள் தொடர்பு செய்தித்துறை இயக்குநர் திரு. எம். எஸ். கோபால் அவர்களையும் சென்னை அருங்காட்சியக இயக்குநர் திரு. ஹரி நாராயணன் அவர்களையும் நன்றி கலந்த அன்புடன் நினைக்கிறேன்.
அச்சு வாகனம் ஏற்றும் பணியை குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாகச் செய்து தந்த பிரி இந்தியா அச்சகத்துடன் இணைந்த அருமை நண்பர் திரு. சி..சரவணகுமார் அவர்களைப் பாராட்டுடன் வாழ்த்துகிறேன். இந்நூல் உருவாகப் பல நிலையில் உதவிய அன்பர்கள் அனைவரையும் நன்றியுடன் என் மனத்திரையில் காண்கிறேன்.
"தமிழக நாட்டுப் புறக் கலைகள்" தமிழன்னையின் திருவடிகளுக்குப் படைக்கப்படுகிறது.
அடையாறு
31-12-1980
அன்பன் ஏ.என்.பெருமாள்