44
இறந்தவரை நினைத்தும் விதவையாகி வாடப்போகும் பெண்ணை நினைத்தும் அழுவதைக் காணலாம். அவளது வாழ்வு அதற்குப் பின்னர் அவல வாழ்வாகி விடுகிறது. ஒப்பாரி ஒலிப்பதைக் கேட்டால் இவ்வுண்மை நன்கு புரியும்.
'சிந்தியிட்டா சிந்தியிட்டா சிறுவைரம் சிந்தி யிட்டா சீமைக்கமலம் சிறுவயிரம் சிந்தியிட்டா
நாட்டுக் கமலம் நல்வயிரம் சிந்தியிட்டா
பொட்டழிஞ்சா மையழுஞ்சா பொறந்தநிறம் பெயர்ந்திட்டாள் மையழிஞ்சா பொட்டழிஞ்சா வளர்ந்தநிறம் பெயர்ந்திட்டாள் பிறக்கயில வச்ச பொட்ட அழிச்சமின்னா பிறந்துட்டு வச்ச பூவப் பறிச்சமின்னா வளரயில வச்ச மைய அழிச்சமின்னா வளர்ந்துட்டு வச்ச மலரப் பறிச்சமின்னா!
இது பிறபெண்கள் விதவையாகி விட்ட பெண்ணை நினைத்து வருந்தும் பாடல். விதவை நிலை ஒரு பெண்ணின் வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவளுக்கு இன்ப வாழ்வு வாழ ஏதும் உரிமை இல்லை என்றாகி விடுகிறது. ஆகையினால் இறந்த கணவனும் வாழும் விதவையும் அடுத்தவரின் இரக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர். சமூகத்தின் சமனற்ற உரிமையால் வாழ்பவளுக்காகவும் பிறர் வருந்த வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மனைவியை இழந்த கணவனுக்கு இரங்கிப் பாடுதல் வழக்கத்தில் இல்லவே இல்லை.
கணவனுக்கு முன் இறக்கவில்லையே என்று வருந்தும் பெண்ணின் அழுகையையும் ஒப்பாரியில் கேட்கலாம். பூவும் பொட்டுமாக அவளுடைய உடல் தீ வைக்கப்பட வேண்டு மென்று விரும்புகிறாள். விதவையாக வாழ எந்தப் பெண்ணும் விரும்பவில்லை. கணவனை இழந்தோரைச் சமுதாயம் சரி நிகராக வாழ அனுமதிக்கவில்லை. அவர்களும் சரியாக வாழ விரும்பவில்லை. இத்தகைய ஒப்பாரிப் பாடல்கள் நாடு முழுவதும் பரந்து நிறைந்துள்ளன. இடத்துக்கு இடம் பழக்கத்துக்கும் வழக்கத்துக்கும் தக்கவாறு மாறுபாடுகளுடன் காணப்படு கின்றன. யார் இறந்தாலும் அவரவர்களுடைய உறவுக்கும் உரிமைக்கும் தக்கவாறு ஒப்பாரிப் பாடல்கள் பாடப் பெறு கின்றன.
தாயாரடித்தல் அல்லது மாரடித்தல்
தாயாரடித்தல் தமிழ் நாட்டில் இன்றும் பல பகுதிகளில் வழக்கத்திலுள்ள ஆடலாகும். ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டின் முன் பல பெண்கள் வட்டமாகச் சூழ்ந்து நின்று