உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




45

பாடியவாறு சுற்றிச் சுற்றி வந்து தாயாரடிப்பர். வீட்டின் முன்னால் பச்சை தென்னை ஓலை கொண்டு ஒரு சிறிய பந்தலைக் கட்டுவர். அதற்குள் பல பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டவாறு இந்த ஆடலை ஆடுவர். பாடிச் சுற்றும் போது குனிவதும் நிமிர்வதுமாக இருப்பர். இரு கைகளாலும் மார்பில் அடித்துக் கொள்வர். ஆகையினால் இந்த ஆடலுக்கு மாரடித்தல் என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. உறவின் முறையினர் மாத்திரமல்லாது ஊரிலுள்ளோர் பலர் இந்த ஆடலில் கலந்து கொள்வர்.

ஒருவர் இறந்த ஐந்தாம் நாளிலிருந்து பதினாறாம் நாள் வரை யிலும் மாலையில் தாயாரடித்தல் நடைபெறும். சிலர் மூன்றாம் நாளிலிருந்தே : தாயாரடிக்கத் தொடங்க விடுவதும் உண்டு. இறந்தவருக்காக வருந்தி அழும் ஆடலாக இது காணப்படுகிறது. பொதுவாக இறந்தவர் ஜம்பது வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் மாத்திரமே இவ்வாடலை நடத்துவர். இளம் வயதினரின் மரணம் பெருந்துயரினைத் தருவதினால் யாருக்கும் ஆடத்தோன்றுவதில்லை. துன்பச் சுமையால் கனத்த மனம் ஆடத்தோன்றாது அமைதியாக அமர்ந்து விடுகிறது. இதிலிருந்து மூத்தோர் சாவு துன்பம் குறைந்தது என்றும் வரவேற்கப் படுவது என்றும் புலனாகிறது. மூத்த பின்னர் இறப்பதைப் பிறர் ஒப்புக்கொண்டு தாயாரடித்து அவர்களை வழியனுப்பு வதாகக் கருதலாம். இருப்பினும் பாடல்கள் துன்பச் கலந்தே காணப்படும். இறப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. இந்த உண்மையை நன்கு தெரிந்து தாயாரடித்தல் நடைபெறுகிறது

சுவை

பாடல்களை நாட்டுப் புற மக்கள் நன்கு தெரிந்து வைத்துக்

கொள்கின்றனர். ஆளுக்கு ஆள் தகுந்த மாற்றங்களைக்

கொடுத்துப் பாடல்களைப் பெண்கள் பாடுகின்றனர். ஒரே விதமான இசையில்தான் பாடல்கள் பாடப் பெறுகின்றன. இறந்தவரைப் புகழ்ந்தும், அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான செய்திகளைக் குறிப்பிட்டும் சில பாடல்கள் பாடப் படும். ஒரு தாயாரடிப் பாடலைக் கேட்கலாம்.

'காய்ச்சல் அடிச்சதென்ன தாயாரய்யா மாதாவே கட்டிலுடன் சாய்ந்ததென்ன தாயாரய்யா மாதாவே மண்டை யிடிச்சதென்ன தாயாரய்யா மாதாவே மண்ணோடே சாய்ந்ததென்ன தாயாரய்யா மாதாவே வண்ணத் தடுக்கு விட்டம் தாயாரய்யா மாதாவே வைத்தியரைக் கொண்டுவந்தோம் தாயாரய்யா மாதாவே வாணாள் பிரிந்தவுடனே வைத்தியரும்-கைவிரித்தான் தாயாரய்யா மாதாவே'.7

(7) குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழிப் பாடல்.