50
ஒப்பாரிப் பாடல்களிலுள்ள சில அடிகளும் இப்பாடல்களில் இடம் பெறுவது நோக்குவதற்கு உரியது. கொடும்பாவியை ஒரு மனிதனாகப் பாவித்து உருவக நிலையில் அவன் இறப்பதாக நினைத்துப் பாடுவதாகவே இந்தப் பாடல்கள் அமைகின்றன. இழுப்போர் சிலவகை நோன்பு முறைகள்
கொடும்பாவி செய்வதும் உண்டு. ஊரைச் சுற்றிக் கொடும்பாவியை இழுத்த பின் ஒரு இடத்தில் அனைவரும் கூடி அதனைத் தீயிலிட்டுக் கொளுத்துவர். அது எரிந்ததும் ஊரைச் சூழ்ந்துள்ள பாவம் எரிந்து விட்டதாகக் கருதித் திரும்புவர். மழை பெய்து ஊர் செழிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்படும். இவ்வழக்கம் குமரி மாவட்டத்தில் இன்றும் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளது.
ஊஞ்சலாட்டம்
இது
பொங்கல், ஆண்டு பிறப்பு, ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்வது வழக்கம். நெல்லை, குமரி மாவட்டங்களில் பெருவழக்காக இன்றும் நடை முறையிலுள்ளது. ஆட்டம் ஒரே முறையாக அமைவதினால்
அதைக்
கலை என்று கூறுவதைவிட ஓர் இன்ப விளையாடல் என்று சொல்வதே பொருந்தும் இருப்பினும் ஊஞ்சலாடும் போது பாடப்படும் இனிய பாடல்கள் கலைநயம் மிக்கனவாகக் காணப்படுகின்றன. கேரள மாநிலத்தில் ஓணப் பண்டிகையின் போது ஊஞ்சலாட்டம் நடைபெறுகின்றன. ஊஞ்சலைப் பற்றிய குறிப்பு குறிஞ்சிக் கலியின் முதற் பாடலில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து சங்க காலத்திலும் இந்த ஆட்டம் இருந்துள்ளதாக அறியலாம். பெரும்பாலும் பெண்களே இப்பாடலில் பங்கு கொள்வர். மிக எளிதாக ஆடக் கூடியது. ஆயினும் சில சமயம் ஆண்களும் ஆடுகின்றனர். அவர்கள் ஆடும்போது ஆட்டத்தின் வேகமும் முறையும் மாறிவிடுவதைக் காணமுடிகிறது.
கயிறு
வாய்ப்பான மரக்கிளைகளில் இரண்டு கயிறுகளைக் கட்டித் தொங்க விடுவர். தாழை அல்லது பனை நாரால் முறுக்கப்பட்டிருக்கும். தொங்கும் பகுதியில் ஒரு பலகை அல்லது உலக்கையை இணைத்து இருப்புக்கு வசதி செய்வர். அதில் ஒன்று முதல் நான்கு பெண்கள் அமர்ந்து கயிற்றைப் பல மாகப் பிடித்துக் கொண்டு ஒருவருக்கு மேல் ஆடும்போது இருபக்கமும் மாறிமாறி அமர்ந்து கொள்வர். கால் உந்தலால் ஊஞ்சலை அங்கும் இங்கும் வேகங் கொள்ளுமாறு செய்வர். ஆண்கள் உலக்கையில் ஏறிநின்று
ஆடுவர்.