51
உந்தி மிக வேகமாய் ஆடுவதும் உண்டு. ஊஞ்சலை ஊசல் என்றும் குஞ்சலாம் என்றும் கூறுவர்.தனிப்பட்ட நோக்கம் எதுவும் ஊஞ்சலாட்டத்துக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. சமுதாயக் கொண்டத்தை மிக மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கே இவ்வாடல் நடைபெறுவதினால் இதனைச் சமுதாயச் சார்புக் கலைகளுடன் இணைத்து விளக்கம் தரப்படுகிறது.
பெண்கள் சுவையாகப் பாடியவாறு ஊஞ்சலாடுவர். அனைவரும் இணைந்தும், ஒருவர் மாறி ஒருவரும், ஒருவர் பாடியதைப் பிறர் இணைத்துத் திரும்பப் பாடியும் மகிழ்வதைப் பார்க்கலாம். ஊஞ்சல் கட்டுவதைப் பற்றியே ஒரு பாடல் பாடு வதைக் கேட்கலாம்.
'ஏல ஏலோ கிளிக் குஞ்சாலோ! மட்டை வெட்டி நாருரித்து
எங்க மாமன் போட்ட குஞ்சால் ! கள்ளி வெட்டி நாருரித்து
எங்க அண்ணன் போட்ட குஞ்சால்! இந்தக் குஞ்சாலம் போட்டவருக்கு என்ன என்ன கொடுக்க வேண்டும்
கிண்ணியிலே சந்தனமும் கிளிமூக்கு வெத்திலையும் பொத்தாங் கண்ணிச் செரட்டையிலே கொஞ்சம் பொன்னுருக்கிக் கொடுக்க வேண்டும் Ig
ஊஞ்சல் கட்டித் தந்தவர்களுக்கு தங்களுக்கிருக்கும் மகிழ்ச்சியில் மங்கலப் பொருட்களாகிய சந்தனமும் வெற்றிலையும் கொடுப்ப துடன் பொன்னும் கொடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் கள் விரும்புகின்றனர்.
சமுதாய நிகழ்ச்சிக் குறிப்புடைய நீண்ட நெடும் பாடல் களையும் கதைபோல் ஊஞ்சலாடும் பெண்கள் பாடுவர். பெண்ணை மறப்பதற்காக
ஒரு
ஒருவன் வருகிறான். அதைக்
குறிப்பிடும் பாடலைக் கேட்கலாம்.
பட்டணமாம் பட்டணமாம் பாரில் நல்ல பட்டணமாம் பட்டணத்துச் செட்டியாருக்குப் பதினாறு மக்களுண்டாம் பதினாறு மக்களிலே ஒரு மகளாம் பத்தினியாம்
பத்தினியைக் கொள்ள வாரான் பாரில் நல்ல செட்டிமகன்’
திருமணம் முடிகிறது. அவளுக்குப்
பெற்றோரைப்
பிரிய
மனமில்லை. கணவனுடன் செல்லவும் வேண்டும். அவளுடைய மனமில்லாத மனத்தை விளக்குகிறது பாடலின் ஒரு பகுதி. வ
(12) குமரி மாவட்டப் பாடல்.