உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பெண் :

ஆண் :

54

காராம்பசு வேடங்கொண்டு புல்லைக் கடித்தாயானால் ஆற்றங்கரை ஓரத்திலே அரளியாய்ப் பூத்திடுவேன்

ஆற்றங்கரை ஓரத்திலே அரளியாய்ப் பூத்தாயானால் பண்டார வேடங்கொண்டு பறித்திடுவேன் அப்பூவை.'

ஆணும் பெண்ணும் எதிர்ப்பட்டால் ஏற்படும் நிலையை ஊடு பொருளாகக் கொண்டது இந்தப் பாடல். ஆண் அவளைப் பற்ற விரும்புவதும் பெண் அவனிடமிருந்து தப்ப முயல்வதும் இதில் விளக்கப் படுகிறது. பாடலை ஆணே தொடங்கி அவனே வம்பில் சிக்க முடிப்பது நோக்குவதற்கு உரியது. அவளை வைத்து தனக்கு இணங்க வைக்கும் ஆணின் ஆவலும் அவ னுடைய பிடியிலிருந்து தப்ப நினைக்கும் பெண்ணின் அச்சமும் முட்டி மோதும் இந்தப் பாடல் ஊஞ்சலாடும் பெண்களின் வாயில் கொஞ்சி விளையாடுவது அரிய கலையாகும்.

நகைச் சுவையாகவும் பெண்கள் பாடுவதைக் கேட்கலாம்.. தங்களுடைய எளிய வாழ்வில் நடப்பதைக் கொண்டே நகைச் சுவைக் காட்சிகளைப் படைக்கின்றனர்.

'உரியரி காய்ச்சி வச்சாள் மாயேக்கி ஊத்திக் குடிச்சான் செம்பிலிங்கம் செருப்பைக் கழத்தினாள் மாயேக்கி செவிட்டிலே வாங்கினான் செம்பிலிங்கம்!

இவ்விதமாக எத்தனையோ பாடல்களை இசையழகுடன் இனிது பாடி பெண்கள் ஊஞ்சலாட்டத்தில் மகிழ்கின்றனர். து ஏழையரும் எளிதாக ஆடும் ஆடல். செல்வரும் விரும்பி ஆடும் ஆடல். நாட்டுப் புற மக்கள் மனமகிழ்ந்து ஆடும் ஆடல். நகைச்சுவையும் நல்ல கருத்துக்களும் நிறைந்த பாடல்கள் ஊஞ்சல் ஆட்டத்துக்கு உண்மையான உயர்வைக் கொடுக் கின்றன.

வினாவிடையாகவும் பாடல் உள்ளது. ஒருத்தி வினாவை எழுப்ப அடுத்தவள் விடை கூறுவதாக அமையும். ஒவ்வொரு அடியாக மாறிமாறிப் பாடும் பாடலும் உண்டு.

'காச்சிக் கலக்கி வச்சான் காலேனி

ஊத்திக் குடிச்சான் செம்பிலிங்கம்

சொல்லிக் குடுத்தான் சந்தனம்

சந்தன மென்றால் நாறாதோ

நாறுவதுக்கும் கருவாடோ