55
கருவாடென்றால் காயாதோ காயிவதுக்கும் கட்டையோ கட்டையென்றால் எரியாதோ
எரிவதுக்கும் எண்ணையோ
இவ்வாறு பாடல் நீண்டு கொண்டே
இருக்கும். மக்கள்
கொண்டாடும் சமுதாய விழாக்களில் ஊஞ்சலாட்டத்தின் மூலம் பலவிதமான பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர். இதில் ஆடலை விடவும் பாடலுக்கே சிறப்பிடம்
யுணர்வு மிகுந்த ஊஞ்சல் விருந்தளிக்கத் தகுந்தவை.
உள்ளது. கலை
பாடல்கள் அறிவுக்கும் நல்ல
தொழில் தொடர்பான பாடல்கள்
நாட்டுப் புற மக்கள் பயிர்த் தொழிலையே அதிகம் செய்கின்றனர். ஆகையினால் உழவுத் தொழிலைப் பற்றிய பாடல்களும் ஆடல்களும் அவர்களிடம் மிகுதியாகக் காணப் படுகிறது. ஏர்மங்கலம், முகவைப் பாட்டு, உழத்தியர் பாடல் ஆகியவை பழங்காலம் தொட்டு தமிழ் மக்களிடம் சிறப்பாகப் பரவியுள்ளது. அதனுடைய வளர்ச்சியாகவே பள்ளு நாடகம் வளர்ந்துள்ளது. பயிருக்கு நீரிறைக்க ஏற்றம் பயன் படுத்தப் பெறுகிறது. ஏற்றமிறைக்க உழைப்பு தேவைப் படுகிறது. உழைப்பால் களைப்பும் அலுப்பும் ஏற்படுகின்றன. இவற்றைக் களைந்து இன்பவுணர்வுடன் ஏற்றமிறைக்க மக்கள் ஏற்றப்
பாட்டு
களை
நாற்றுநடல், பாடுகின்றனர். விதைத்தல், பிடுங்கல், அறுத்தல், சூடடித்தல், தானியம் அளத்தல் ஆகிய வற்றுக்கும் தனித்தனிப் பாடல்கள் உள்ளன. நல்ல விதமாகப் பயிர் விளைந்து அறுவடையானதும் அதனைப் பலவிதமான கலை நிகழ்ச்சிகளால் நாட்டுப்புற மக்கள் கொண்டாடி மகிழ் கின்றனர். மனநிறைவும் இன்பவுணர்வும் இவ்வித கலைகளுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.
வெற்றிலைக் கொடிகளைப் பயிர் செய்யும் இடங்களில் கொடிக்கால் பாடல்கள் பாடப் பெறுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்தகைய பாடல்கள் மிகுதியாகப் பாடப் பெறுகின்றன. நெல் குத்தல், சுண்ணாம்பு இடித்தல், உப்பு வாருதல், எண்ணெய் ஆட்டுதல், ஆடுமாடு மேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யும் போதும் மக்கள் அவற்றுடன் தொடர் பான பாடல்களைப் பாடி மகிழ்ந்துள்ளனர். கடலிலிருந்து சங்குகளை அரித்தெடுக்கும் தொழில் பல இடங்களில் நடை