உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

ன்புறு

பெறுகிறது. அப்பொழுதும் சில பாடல்களைப் பாடி கின்றனர். வண்டி ஓட்டிச் செல்வோர், பாரம் சுமப்போர் பாடும் பாடல்களும் உள்ளன.

தொழிலைப் பற்றிய அறிவை இத்தகையப் பாடல்கள் உணர்த்துவதுடன் அந்த அந்த தொழில் செய்வோரை இன்புறச் செய்வதற்கும் தொழிலின் பழு தோன்றாமல் இருப்பதற்கும் இத்தகைய பாடல்கள் உதவுகின்றன. பாடல்கள் விதம்விதமாக இருக்கும். பாடுவோரின் மன விருப்பத்துக்குத் தக்கவாறு பாடல் அமையும். ஒரு சுதந்திரப் பறவையாக மாறி இத்தகைய பாடல்களைத் தொழில் செய்வோர் தங்கள் மனம் போல் பாடி மகிழ்வதே இப்பாடல்களின் தனிச்சிறப்பாகும்.

தொழில் பற்றிய பாடல்களும் ஆடல்களும் உலக முழுவதும் பரந்துள்ளன. தமிழ் நாட்டில் இருப்பது போன்று நெல் பயிரிடுவது பற்றிய ஆடல் கலைகள் ஜப்பான், பிலிப்பைன் தீவுகள், மடகாஸ் தீவு ஆகிய இடங்களிலும் உள்ளன. இந்தியாவில் ஆந்திரம், வங்காளம்,பீகார் ஆகிய மாநிலங் களிலும் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் நெல் பயிரிடும் பகுதிகள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பஞ்சாப், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோதுமைப் பயிர் விளைவித் தலைப் பற்றிய ஆடல்கள் நடைபெறுகின்றன. தென் அமெரிக்கா வில் கம்பிளி மயிர் சேர்த்தல் பற்றியும் ஹங்கேரியில் வைக்கோல் சேகரித்தல் பற்றியும் நடனங்கள் நடக்கின்றன. பின்லாந்தில் அரிவாள் போன்ற அறுவடைக் கருவிகளுடன் அறுவடை விழா நடனங்கள் நடத்தப் படுகின்றன. எங்கெங்கு என்ன என்ன தொழில் நடை பெறுகிறதோ அதையொட்டி கலைகள் அமைக்கப் பெறும் உண்மையை அறிதல் வேண்டும்.

பயிருக்கு வேண்டியது மழை, அதனை வேண்டி பல வித ஆடல்கள் நடப்பதை உலகமெங்கும் காணலாம். தொழிடன் இணைத்த இவ்வித கலைகள் இறையருளை வேண்டும் நோக்கத் துடன் கலந்து, சமயச் சார்பாக வண்ணம் மாறியுள்ளதையும் காணலாம். தமிழ் நாட்டில் மாரியம்மன் ஆடல்கள் மெக்சிக்கோ நாட்டு அஸ்திக் பழங்குடியினர் (Aztecs) கொண்டாடும் ஷிலோனென் (Xlionen) சிந்தியோட்டில் (Cinteotle) ஆகிய விழாக் களில் ஆடும் ஆடல்கள் போன்றவை மழையையும் பயிரையும் கருதிய கலை நிகழ்ச்சிகளே ஆகும். வாழவுக்கு வளமை சேர்ப் பதைக் கலையாகக் கண்டு மனிதன் களிப்பது இயல்பாகவும்