உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




69

தட்டுப் பாட்டுடன் வளர்க்கின்றனர். கோழியின் நிறத்தையும் போர் நடக்கும் நேரத்தையும் குறிப்பாகக் கொண்டு நாளும் கோளும் பார்த்துச் சேவலைச் சண்டையிடுவதற்காக வெறி யேற்றிக் களத்தில் விடுகின்றனர். சேவலின் கால்களில் கூர்மை யான. கத்தியைக் கட்டியிருப்பார்கள். இரண்டு சேவல்களும் வெறிகொண்டு கழுத்திலுள்ள முடிகளைச் சிலிர்த்தவாறு ஒன்றை. ஒன்று எதிர்த்து வேகமாகத் தாக்கும். காலிலுள்ள கத்தி ஏதாவதொன்றைக் கீறியதும் அது பின்வலித்து ஓடும். உடனே அதன் காலை முறித்து வெற்றி பெற்ற கோழியின் உரிமையாளரிடம் கொடுத்து விடுவர். இத்தகைய சேவல் போரை மக்கள் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்பர். சில சமயம் வெற்றி தோல்வி இன்றி வெகு நேரம் இரண்டு சேவல்களும் சண்டையிடும். இதைப் பார்க்க மக்கள் சலித்து விடுவர். உடனே 'விராசி' (சமாதானம்) என்று கூறி இரண்டு கோழி களையும் உரியவர்களிடம் கொடுத்து விடுவர். அடுத்து இரண்டு சேவல்கள் போர்க்களத்தில் ஏவப்படும்.

காடு

இத்தகைய கொடுமையான சேவல் போரைப் பலர் இரக்க வுணர்வுடன் வெறுத்தனர். தடை செய்யவும் முயன்றனர். இப் பொழுது இத்தகைய சண்டை மிகவும் அருகிய நிலையில்தான் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெட்டி என்ற ஊரில் இப்பொழுதும் வாரந்தோறும் சேவல் போர் நடைபெறுகிறது. பல சமயம் சேவல் போர் மனிதர்களின் சண்டையில் போய் முடிந்து விடுவதும் உண்டு. பந்தயம் கட்டிக் கொண்டு சேவல்களைக் களத்தில் இறக்கி விடுவர். பெரும் பாலும் அது மக்களின் சண்டையில்தான் முடியும். ஆகையினால் அதை மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டனர்.

ஆட்டுக் கடாச்சண்டை

வீர முனைப்புக்குப் பெயர் பெற்ற ஆட்டுக்கடாக்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதும் சில இடங்களில் நடக்கிறது, அவை மோதும் போது படார் படாரென ஒலி கேட்கும் அதைக் கேட்டு கைகொட்டி ஆர்ப்பரிப்போரும் உள்ளனர். போரில் சில சமயம் கொம்புகள் முறிந்து தொங்கும். குருதி கொட்டும். ஆனாலும் அவை பின்னடையாது போரிடும் இரக்க முடையோர் இந்தக் காட்சியைப் பார்க்கவே முடியாது மக்களின் வீரவுணர்வா அல்லது வெறிப்போக்கா இத்தகைய விளையாட்டுக்குக் காரணம் என்று கூற முடியவில்லை. விடுதலும் இக்காலத்தில் அருகி விட்டது.

கடாக்களை

மோத