உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

மக்களின் எதிர்ப்புணர்வே இத்தகைய களிப்பு ஆடல் களுக்குக் காரணம் என்று கூறலாம். தன்னுடைய ஆற்றலைக் காட்ட விரும்பும் மனிதன் பிற உயிரினங்களின் ஆற்றலையும் அறிய விரும்புகிறான். மரணப்பிடி வரையிலும் தான் சென்று வீரம் விளக்குவது போன்று அவற்றையும் அந்த எல்லைவரை விரட்டி வேடிக்கை பார்க்க ஆவலுறுகிறான்.

வீரக் கலைகளால் விளக்கம் பெறும் மனிதன் சமூகத்தில் ஒரு மதிப்பைப் பெறுகிறான். பெண்களைக் கவரும் தன்மை யாகவும் அது விளங்குகிறது. அவனுடைய போராற்றல் கலைக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் பயன்படுவது நன்று. அத்தகைய இயல்புடன் விளங்கும் வீரக்கலைகளே அனைவ ராலும் வரவேற்கப்படும். அவையே நிலைத்து வளரும். போர் உணர்வு குறைந்துள்ளதினால் வெறித்தன்மையுடைய பல கலைகள் மங்கி மறைந்து வருகின்றன. பழங்குடி மக்களிடம் சில ஒதுங்கிய இடங்களில் வெறிக்கலைகள் இன்றும் விறுவிறுப்பு வேகமுடன் நடப்பதாகக் கூறப்படுகிறது. அவை போர் வெறியைத் தூண்டும் தன்மையுடையன. இந்தியாவைப் பொறுத்தவரை இத்தகைய வெறித்தன்மை குன்றிய கலைகளே உள்ளன. பீலர், தோகட், கோண்ட் சவரர் கிய பழங் குடியினரிடம் அவை பழக்கத்தில் உள்ளன.

போட்டியாடல்கள்

மனிதனின் வீர முறுக்கமே பலவிதமான போட்டி பந்தயங் களுக்கு காரணமாக அமைகிறது. அதன் காரணமாகப் பகையைத் தேடி அல்லல் படுவது பல இடங்களில் கேட்கப் படும் செய்திகளாகும். போட்டிகள் விளையாடலாகத் தான் நடத்தப் படுகின்றன அவற்றிலும் கலைத்தன்மைகள் உள்ளன.

தேங்காய்ப் போர்

உயிருள்ள சேவல் ஆட்டுக்கடா முதலியவற்றை மோதவிட்டு இன்பம் காண்பது போன்று தேங்காயை உருட்டி மோத விட்டு இன்பம் காண்பதும் மக்களுக்குச் சில இடங்களில் பழக்கமாக உள்ளது. உரித்த தேங்காயைத் தெரிந்தெடுத்து மோத விடுவர். அத்தகைய தேங்காயை 'வேட்டுத் தேங்காய்' என்று கூறுவர்.

இத்தகைய போர் பெரும்பாலும் பொங்கல் பண்டிகை நாளில்

வெகு விமரிசையாய் நடக்கும் மக்கள் இரு கூறாகப் பிரிந்து இத் தகைய போரில் ஈடுபடுவர் சாக்கு மூட்டையில் போர்த் தேங்காய்கள் இரு பக்கத்திலும் கட்டி வைக்கப் பட்டிருக்கும் ஒரு