உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(கொட்டங்கச்சி

71

பல

அல்லது சிரட்டை) பலமாக இருக்கும் தேங்காயே போருக்குப் பயன் படுத்தப்படும். பல நாட்களாக அத்தகைய தேங்காயே போருக்குப் பயன் படுத்தப்படும். நாட்களாக அத்தகைய தேங்காயைச் சேகரிப்பார்கள். குறிப் பிட்ட மரத்திலுள்ள காய்களையே பயன் படுத்துவார்கள். தேங்காயை உருட்டுவதற்குத் தேர்ச்சி பெற்றவர்கள் உண்டு. உடைந்த தேங்காய் எதிர் பக்கத்துக்கு உரிமையாகிவிடும். நெல்லை மாவட்டத்திலுள்ள மாவடி, மலையடிப் புதூர் ஆகிய ஊர்களில் ஆண்டு தோறும் நடக்கும் தேங்காய்ப் போர் ஆயிரக் கணக்கான மக்களுக்கு நல்ல காட்சியாக இன்றும் விளங்குகிறது.

வண்டிப் பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம் பல டங்களில் நடக்கின்றன. விரைவான காளைகளை வண்டியில் பூட்டி பந்தயம் கட்டிப் போட்டிகள் நடக்கும். குறிப்பிட்ட தூரத்தைக் குறிப்பிட்டு வண்டிகளை விரட்டுவர். ஆண்டு தோறும் குமரி மாவட்டத்தில் கொட்டாரம் ஊரிலிருந்து கன்னியாகுமரி, வரையிலும் நவராத்திரி (பூசையெடுப்பு) நாளில் நடக்கும் வண்டிப் பந்தயம் மிகவும் சிறப்புடையது. நெடுஞ்சாலையில் நடக்கும் இந்தப் பந்தயத்துக்கான அனுமதியை அரசிடம் முன்பே பெற்றுவிடுவர்.

மனிதனின் வீர உணர்வின் அடிப்படையாகவே இத்தகைய போட்டிகள் நடக்கின்றன. தங்கள் ஆற்றலைப் பல முறையில் காட்டி விளக்கம் பெற மனிதன் முயல்வதற்கு இவை சான்று களாக அமைகின்றன. கலைச் சிறப்பு குன்றியவையாக இவை அமையினும் கலைவுணர்ச்சியின் பயனாகவே உருவாகியுள்ளன என்பது தெளிவு.