75
மலைமீது நடக்கும் போது பொருட்களை ஒரு கம்பில் தொங்க விட்டவாறு தோளில் தூக்கிக் கொண்டு செல்வது வசதியாகவும் எளிதாகவும் இருக்கும். காவு தடியைக் கையால் பிடிக்க வேண்டிய தேவை இல்லை. அதைச் சமன்படுத்திச் சுமந்தால் கையை வீசியவாறு மலைமீது ஒய்யாரமாக நடந்து செல்லலாம். சுமைப் பழுவும் குறையும். நடைவேகமும் கூடும். ஆகையினால் இத்தகைய வசதியை நினைத்து முதலில் மனிதன் காவு தடியைப் பயன்படுத்தி இருக்கவேண்டும்.
மலைமீது செல்லும் மக்கள் முருகனை வழிபடும் ஒரே நோக்கத்துடன் செல்வதால் அவனை வாழ்த்திப் புகழும் பாடல் களைப் பாடிக்கொண்டு சென்றிருப்பர். இன்று சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஐயப்பன் புகழைப் பாடிச் செல்வதை இங்கு நினைத்துப் பார்க்கலாம். முருகப் பக்தருக்காக வழி நடைப் பாடல்கள், காவடிச் சிந்துகள் பல இயற்றப்பட்டுள்ளன. அப் பாடல்களைப் பாடும் போது உணர்ச்சி ததும்ப ஆடிக்கொண்டே நடந்திருப்பார்கள். பாடலும் ஆடலும் பிறருடைய பாராட் டுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதனை ஊக்க உந்தல்களாகக் கொண்டு திறமையுடையோர் சில கலை உத்திகளைக் கையாண்டு பலரைக் கவர்ந்து காவடியாட்டக் கலையை உருவாக்கி இருக்க வேண்டும்.
காவடியாட்டம் சமயவுணர்வில் தோன்றிய கலையாகும் சமயம் மனிதனைக் கட்டுப் படுத்தித் தான் விரும்பியவாறு. செயல்படாமல் தடுக்கும் ஆற்றலுடையது. அத்தகைய கட்டுப் பாட்டிலிருந்து விடுபட்டுத் தன் திறமைகளை முழுமையாகக் காட்ட கலைஞன் விரும்பியதினால் காவடியாட்டம் சமயப் பிடியிலிருந்து நழுவி உரிமைக் கலையாகப் பிரிந்திருக்க வேண்டும். இன்று அதுவே தொழில் முறைக் கலையாக வளர்ந். துள்ளது. இன்றுள்ள நிலையில் காவடியாட்டம் சமயச் சார்பு டனும் கலைச் சார்புடனும் நடைபெறுகிறது.
காவடியாட்டத்தின் வளர்ச்சி நிலைகள் சுமை தாங்கல்
சுமை தாங்கல் + பாடல் + ஆ
வழிபாடு
வழிபாடு
கலைத்தொழில் செய்தல்