76
எளிதாக சுமக்க உதவிய காவடி இறைவழிபாட்டு முறை களுடன் இணைந்து வழிபட உதவும் சாதனமாகிப் பின்னர் கலை முனைப்பால் தொழிற் கலைக்கு உதவும் பொருளாகி இன்று இருவிதக் கூறுகளுக்கும் துணையாகும் கலைக் கருவியாக விளங்குகிறது. இறையுணர்வும் கலையுணர்வும் இவ்விரு பிரிவு களுக்கும் காரணமாக அமைகின்றன.
காவடியாட்டம் நாட்டுப் புறக் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் மற்ற கலைகளுடன் இணையாக நடத்தப்படும் தனியாகவும் ஆடுவது உண்டு. நையாண்டி மேளத்தின் இசை இதற்கு மிகப்பொருத்தமாக அமையும். கலையாகக் காவடி யாட்டம் நடக்கும் போதும் அதை பக்தியுடன் ஏற்றுள்ள நிகழ்ச்சிகளும் உள்ளன. 'வள்ளி திருமணம்' போன்ற நாடகக் காட்சிகளில் இடம் பெறும் காவடியாட்ட நிகழ்ச்சிகள் நாடக மேடையில் நடைபெறும் போது அதைக் கலைக்காட்சியாகக் கருதாது பக்தி வழிபாடாக மதித்து 'அரோகரா' ஒலியுடன் கற்பூர ஆராதனை செய்துள்ளனர். கலைக்காட்சிகளுடன் உண்மையான உணர்வுடன் ஒன்றிக் கலந்துவிடும் நாட்டுப் புற மக்களின் இயல்பை இது தெளிவாகக் காட்டுகிறது.
கரக ஆட்டம்
'கரகம்' என்ற சொல் கமண்டலம், ஆலங்கட்டி, நீர்த்துளி, கங்கை, பூங்குடம் ஆகிய பொருள்களைத் தருகிறது. மலர்களைக் கொண்டு அழகாக ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்து ஆடும் ஆடலுக்குக் கரக ஆட்டம் என்று பொருத்தமாகப் பெயர் கொடுத்துள்ளனர். இதைத் தென்மாவட்டங்களில் 'கும்பாட்டம்' என்று கூறுகின்றனர்.
நெல்லை, குமரி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கரக ஆட்டக் கலைஞர்கள் பலர் உள்ளனர் இந்த ஆட்டத்தைத் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும் விரும்பிப் பார்க்கின்றனர். மாரியம்மன் கொடை விழாக்களில் மிகப் பரவலாக இந்த ஆட்டம் நடத்தப் படுகிறது. இறை வழிபாட்டு நிகழ்ச்சியுடன் இவ்வாடல் தொடர்புடைய தாகக் கருதப்படுகிறது.
கரகம் நீரால் நிரப்பப் பெற்றிருக்கும். இந்த நீர் மாரியை யும் ஏழு புண்ணிய நதிகளையும் குறிப்பிடுவதாக மக்கள் நம்பு கின்றனர். இறைவழிபாட்டுடன் நடத்தப்படும் கரக.
டக்