உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




77

குடங்கள் பூக்களாலும் வேப்பிலையாலும் அழகு செய்யப் பட்டி ருக்கும். மாரி சொரிந்து நாட்டில் வளம் கொளிக்க வேண்டும் என்ற கருத்தில் அம்மன் கொண்டாடிகள் குடமெடுத்து ஆடுவார் கள். ஒரு கைப்பிரம்பு கொண்டு அதைத் தட்டியவாறு ஆடுவர். ஊர் சுற்றி வருவர். மக்கள் பற்றுடன் அவர்களை வரவேற்று மஞ்சள் அரைத்துப் பூசி அவர்களுடைய காலில் நிறைகுடத்து நீர் ஊற்றி வணங்கி நிற்பர். மழை வேண்டும் கடப்பாடாக இந்த ஆடல் நடைபெறுகிறது.

பல

கரக ஆட்டமும் கலையழகு சிறக்கத் தொழில் முறையாகப் இடங்களில் நடைபெறுகிறது. வழிபாட்டுக் கரகத்துக்கும் கலைத்தன்மைக் கரகத்துக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பின்னது முனனது தண்ணீரால் நிரம்பி இருக்க அரிசியால் நிரப்பப்பட்டிருக்கும். மலராலும் வண்ணக் காகிதத்தாலும் ஒப்பனை செய்திருப்பர். கரகத்தின் உச்சியில் ஒரு பொம்மைக் கிளி பொருத்தப் பட்டிருக்கும். பெண்கள் மிகப் பெரும்பாலாக ஆடுவார்கள். ஆண்களும் சில இடங்களில் ஆடுவதைக் காணலாம். இருபாலரும் இணைந்து ஆடுவதும் உண்டு.

கரகத்தைக் கையால் பிடிப்பது இல்லை. தலையில் அதைச் சமனப் படுத்தி மிக வேகமாகக் குதித்தும் சுழன்றும் ஆடுவர். பெரும் பாலும் தொழில் முறைக் கலைஞர் வெண்கலக் குடத்தையே வைத்து ஆடுவார்கள். காலில் சதங்கை கட்டி இருப்பர் அடையை இறுக்கமாக அணிந்து கொள்வர். நையாண்டி மேளத்தின் இசை கரக ஆட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக அமையும். இசைக்கும் தாளத்துக்கும் தக்கவாறு ஆட்டம் நடக்கும். படிப்படியாக உயர்ந்து உச்சகட்டத்தை அடைத்து பின் திடீரென்று நிறுத்தப்படும். அவ்வாறே ஆட்டமும் வேகம் பெற்று விறுவிறுப்படைந்து திடீரென நிற்கும் பேரொலியின் திடீர் நிறுத்தமும் ஆட்ட முடிவும் ஒரு வியப்பான அமைதியை ஏற்படுத்தி மக்களின் ஆரவாரக் கைதட்டலைப் பெறும் சில சமயம் ஒன்றிய உணர்வில் ஒலியற்ற அமைதியுடன் அனைவரும் வியந்து நின்றுவிடுவர். இவ்வாடல் அம்மன் கோயில் முன்புள்ள வெளியிடத்தில் நடக்கும். அம்மன் வீதிவுலா வரும்போது தெருவைச் சுற்றியும் நடைபெறும். ஊர் மக்கள் தங்கள் கையிருப்புக்குத் தக்கவாறு ஆடுபவருக்கு பணமும் பரிசும் கொடுப்பது வழக்கம்.

பல விதமான

சில சமயம் ஆட்டத்துக்கு நடுவில் தந்திர வித்தைகள் கரக ஆட்ட கலைஞர்களால் காட்டப்படும்.