உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

பின்னல் கோலாட்டம் என்ற ஒருவகை ஆட்டம் தமிழ் நாட்டில் நடக்கிறது. ஆடுவோரின் கரங்கள் கயிறுகளால் கட்டப்பெற்று உயரே ஓரிடத்தில் முடியப்பட்டிருக்கும். கோலாட்டம் ஆடி அவர்கள் சுற்றி வரவர வித விதமான பின்னல்கள் கயிறுகளில் போடப்படும். மறு ஆட்டத்தில் அவை பிரிக்கப்பட்டுவிடும். இவ்வாறு பலவிதமாக ஆடுவதைப் பின்னல் கோலாட்டம் என்று கூறுவர்.

மேலும் கோயில் ஊர்க்கோலம் நடக்கும் போதும் இத்தகைய பின்னல் கோலாட்டம் ஆடப்படும். ஆனால் இது வேறு வகை யாக அமையும். பின்னலிடுவதும் அவிழ்ப்பதும் இதில் முக்கிய இடம்பெறும். கலைச் சிறப்புடைய கோலாட்டம் வகை யாகப் பிரிந்துள்ளது அதன் முக்கிய நோக்கம் ஆடிப்பாடி இறைவனை வழிபடுவதே யாகும்.

களியலடித்தல்

வகை

குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் களியலடித்தல் இன்றும் மிகச்சிறப்புடன் நடைபெறுகிறது. கோலாட்டம் போன்றே இந்த ஆட்டத்திலும் இரண்டு கம்புகளைப் பயன் படித்தி அடிக்கின்றனர். கம்புகள் மிகச் சிறிதாக இருப்பதினால் அவற்றைக் களியல்குச்சிகள் என்றே கூறுகின்றனர். மேலும் இதன் சிறப்பு குச்சிகளில் இல்லாமல் ஆட்டத்தின் களிப்பில் இருப்பதை ஆட்டத்தின் பெயரைக் கண்டே அறியலாம்.

களி' என்ற சொல்லுக்கு 'இன்பம், ஆட்டம்' என்ற இரு பொருள்கள் உள்ளன. மலையாள மொழியில் ஆட்டத்தைக் 'களி' என்று தான் குறிப்பிடுகிறார்கள். கதகளி, திருவாதிரைகளி போன்ற ஆடற்பெயர்களால் இதனை நன்கு அறியலாம். ஆட்டத்தால் மக்கள் பெறும் களிப்பிலிருந்து இந்தச் சொல் உருவாகி இருக்க வேண்டும்.

இரண்டு குச்சிகளை ஒன்றுடன் ஒன்றை அடித்து தாள யொலி எழுப்பி அதற்குத் தக்கவாறு ஆடுவர். பாடலும் இடம் பெறும். குச்சிகள் குட்டையாகவும் கைபிடிக்க வசதியாகவும் அமைந்து இருக்கும். அடிபடும் இடம் சிறுத்துக் காணப்படும். ஆடுவோர் ஒற்றை வட்டமாகவோ இரட்டை வட்டமாகவோ நின்று ஆடுவர். ஒரு பாடகர் வட்டத்தின் மத்தியில் நின்று பாடுவர். அவரைப் பின்பற்றி வேறு இருவர் கூடிப் பாடுவதும் உண்டு. களியலடிப்போர் பாடுவது வழக்கமில்லை. இரண்டு தாளமும் ஒரு மிருதங்கமும் இணைந்து தாள இசை கூட்டும்.