83
ஆடுவோர் காலில் சதங்கை கட்டி இருப்பார்கள். தாளத்துக்குத் தக்கவாறு குச்சிகளை அடித்து முன்னும் பின்னுமாகத் திரும்பி யும் குனிந்து நிமிர்ந்தும் ஆடுவார்கள். கோலாட்டம் போன்றே சுற்றிச் சுற்றி வருவர்.
ஆலய
வழிபாட்டுப் பாடல்களே முன்பு பாடப்பட்டன. விழாக்களில் தான் ஆடப்பெற்றது. ஆனால் இன்று சமூக விழாக்களில் அதற்குத் தக்க பாடல்களுக்காகவும் களியலாட்டம் நடத்தப்படுகிறது. அறுவடை பற்றிய செய்திகள், வரலாற்று நிகழ்ச்சிகள், புராணக் கதைகள் ஆகியவற்றை விளக்கியும் இவ்வாடல் சில இடங்களில் நடத்தப் பெறுகிறது. தற்பொழுது கிருஸ்தவ பண்டிகைகள், பள்ளி விழாக்களிலும் களியவடித்துப் பாடுகிறார்கள். களிப்பை அள்ளித் தரும் இந்த ஆடலில் சிறுவர் சிறுமிகள் பங்கு கொண்டு களிப்பதைக் கண்டு பெரியவர்கள் மகிழ்கிறார்கள். இதன் பெருமையை நாட்டுப்புற மக்கள் நன்றாக உணர்ந்து களிக்கிறார்கள்.
பொடிகழியாட்டம்
தமிழ்நாட்டில் கீழ்க் கடைற்கரையோரம் வாழும் மீனவர்கள் பொடிகழியாட்டம் ஆடிக் களிக்கின்றனர். பெரும் பாலும் பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களை அடுத்தக் கரையோரப் பகுதி மக்களே இந்த ஆடலை மிகுதியாக நடத்துகின்றனர். சிறிய கம்புகளைப் பயன்படுத்துவதினால் இந்த ஆட்டத்தைப் 'பொடிகழி' என்று கூறுகின்றனர். எட்டு முதல் பதினாறு ஆண்கள் இதில் கலந்து ஆடுவர். பெண்கள் பாட்டுப் பாடுவார்கள். முருகக் கடவுளை வழிபடுவதாகவே பாடல்கள் அமையும்.
உதைத்துத் பாடலுக்குத்
தா அடிப்பார்கள்.
ஆடுவோர் இரண்டிரண்டு பேராக இணைந்து ஒருவரை ஒருவர் பார்த்து வட்டமாக நிற்பர். ஒருகையை இடுப்பில் வைத்து மறுகையிலிருக்கும் கம்பினால் அடுத்தவருடைய கையிலிருக்கும் கம்பில் காலைத் தரையில் சதங்கை கட்டுவதும் உண்டு. தாளமிட்டு கம்புகளை அடிப்பர். கோலாட்ட ஒழுங்குகளே இந்த ஆடலில் காணப்படும். பாடல் முடிந்து அடுத்த பாடல் தொடங்கும் போது ஆடல் திடீரென்று நிறுத்தப் படுவது சிறப்பாகத் தோன்றும். சில சமயம் ஆண்களும் பெண்களும் இணைந்து பாடுவதையும் காணலாம்.
ஒரு