பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

அறவே அழிந்து போயின. இப்போதுள்ள பழந்தமிழ்ப் பாக்களெல்லாம், தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர்ப் பாடப்பட்டனவே. உரையாசிரியர்கள், தொல்காப்பியம் கூறும் இலக்கணத்திற்கான மேற்கோள்களை, இப்பாடல்களில் காண இயலாது, மேற்கோள் வந்தவழிக் கண்டு கொள்க எனக்கூறிவிடுவதும் செய்துள்ளனர் என இந்நூலிலேயே அவர் குறிப்பிடுதல் காண்க.

ஆக, பார்ப்பனப்பாங்கன் பற்றிய குறிப்பு இடம் பெற்ற பாக்கள், பண்டு பாடபெற்றிருந்தமையாலேயே தொல்காப்பியர், அதற்கு இலக்கணம் வகுத்தார். அவ்ர் காலத்துக்கு முன்னர் வழக்கில் இருந்து, பின்னர் வழக்கிறந்து போன பலவற்றுள் இதுவும் ஒன்று ஆகலாம். ஆகவே, அது,பிற்காலப் பாக்களில் இடம் பெற்றிலது.என்று தான் கொள்ளவேண்டுமே ஒழிய,அது,தமிழ்ப் பாக்களில் இடம்பெறவில்லை. ஆகவே, அது தமிழர் மரபு அன்று, சமஸ்கிருத மொழியாளர் மரபு. அம்மரபு சமஸ்கிருதத்தில் வளர்ந்தது, கி.மு.300ல். அது, தமிழகம் வந்து தமிழரிடையே செல்வாக்குப்பெற மேலும் சில நூற்றாண்டுகள் கழிந்திருக்கும். ஆகவே, அதற்குத் தம் இலக்கண நூலில் வடிவம் கொடுத்த தொல்காப்பியர், கி.பி. முதல் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்திருக்க இயலாது எனக் கெர்ள்வது முறையாகாது.

பார்ப்பனப்பாங்கன் பற்றிய குறிப்பு, எட்டுத் தொகை நூல்களில் இடம்பெறவில்லை என்ற திரு. அய்யங்கார் கூற்றிலும் உண்மை இல்லை.

கணவன், பரத்தையர் தொடர்பு கொண்டு ஒழுக்கம் கெட்டு அலைகின்றான் என்பதறிந்து, அவன் மீது கடுஞ்சினம் கொண்டிருப்பாள் ஒரு கற்பு நிறை மனைவிப்பால் சென்று, அவள் சினம் போக்கிக் க்ணவனை ஏற்றுக்