பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. சங்க கால அரசியல் அமைப்பு


தமிழ்நாடு,இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப,குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை எனப் பிரிந்திருந்தது.அப்பகுதிகளில் வாழும் மக்களும்,அவர்கள் செய்யும் தொழில் நிலைக்கு ஏற்ப,வேட்டுவர்,ஆயர்,உழவர்,பரதவர்,எயினர் எனப் பிரிந்தே வாழ்ந்தனர்.

கோன்:

இவர்களுள்,ஆடு,மாடு,எருமை முதலாம் விலங்குகளைக் கொன்று தின்பதை விடுத்து அவற்றை ஓம்பி,ஒன்று பலவாகப் பெருக்கினால்,அவை தரும் பால், தயிர், வெண்ணெய் முதலாம் பயன்கொண்டு வாழலாம் என்பதை அறிந்து,அவ்வாடு மாடு, எருமைகளை முதன் முதலாகப் பேணி வளர்க்கத் தலைப்பட்டவர் முல்லை நிலத்து ஆயரே ஆவர். இவ்வகையால் அவர்கள் ஈட்டி வைத்திருந்த ஆனிரைச் செல்வங்களுக்கு அண்டை நிலத்தவர்களால் அழிவு நேராவாறு காக்கவல்ல ஒருவன் அவர்களுக்குத் தேவைப்பட்டான்.அதனால்,அத்தகைய ஆற்றல் வாய்ந்த ஒருவனைத் தமக்குள்ளே தேர்ந்து தலைவனாகக்கொண்டனர்.இவ்வாறு,தொடக்க நிலையில், ஓரினத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனே, காலம் செல்லச் செல்ல, ஊராளும் அரசனாகவும், நாடாளும் பேரரசனாகவும் உருப்பெற் றான். அரசனைக் குறிக்கும், கோ, கோன். எனும் பெயர்கள் ஆயர்குலப் பெயர்களாதலும் அறிக.

தமிழகம் முழுவதும் தனி ஒருவன் ஆட்சிக் கீழ் என்ற நிலை, சங்க காலத்தில் உருவாகவில்லை. சேரர்,சோழர்,