பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின் இணைப்பு:


என் கடன் பணி செய்து கிடப்பதே!

என் தமிழ்ப்பணி

புலவர் கா. கோவிந்தன்

1932: செய்யாறு உயர்நிலைப் பள்ளியில் 8-வது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழாசிரியர், உயர்திருவாளர், மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள். எங்கள் ஊரில் பானு கவியார் என்ற பெரும்: புலவர், துறவியார் இருந்தார். வடலூர் வள்ளலார் இயற்றிய அருட்பா குறித்து எழுந்த 'அருட்பார் மருட்பா, வாதத்தில், அருட்பாவாத நெறியாளரோடு நின்று வாதிட்ட வன்மையாளர். எங்களூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு வேதபுரீஸ்வரர், திருஞான சம்பந்தர் அவர்களால், ஆண்பனை பெண்பனையாசுப் பாடப் பெற்ற பெருமைக்குரிய பெருமான் அவர் துணைவியார் பாலகுஜாம்பிகையார் அந்த அம்மையார் மீது "இளமுலை நாயகிப் பிள்ளைத் தமிழ்" என்ற பொருள் செறிந்த நூலைப் பாடியவர் பானு கவியார். அத்தகு பெரும் புலமை வாய்ந்த பானுகலியாரை வாதத் தில் வென்றவர் திரு வீரபத்திரப்பிள்ளை அவர்கள். அவர் வேலூரில், இன்று வெங்கடேசுவரா மேல் நிலைப்பள்ளி என அழைக்கப் பெறும் அன்றைய ஸ்ரீமகந்து



புலவர் அவர்கள் கடைசியாக எழுதிய கட்டுரை.