பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனர்

11

சிலப்பதிகாரம், மனையறம் படைத்த காதை- "உரை சால் சிறப்பின் அரசு விழை சிறப்பு” என்ற வரியோடு தொடங்குவதற்கு முன்னர், அழகிய சிற்றபலக் கவிராயர் வீட்டுச் சிலப்பதிகார மூலப் பிரதியில் இடம் பெற்றிருக்கும் சில வரிகளில், கரிகாற் பெரும்பெயர்த் திருமாவளவன் என, கரிகாலனும் திருமாவளவனும் ஒருவரே என்பதை . உறுதிப்படுத்தும் தொடர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது:18

மங்கல வாழ்த்துப் பாடலில், இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை, உப்பாலைப் பொற் கோட்டு உழையதா-எப்பாலும் செருமிகு சினவேல் செம்பியன், ஒரு தனி ஆயி உருட்டுவோன். எனவே19 என் வரும் வரிகளில் இடம் பெற்றிருக்கும். "செம்பியன்" என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார், கரிகாலன் எனப் பொருள் கூறியுள்ளார்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் வரும் இருநில மன்னன்20 என்ற தொடர்க்கும் அடியார்க்கு நல்லார் 'கரிகாலன்' என்றே பொருள் கொண்டுள்ளார். .

கடலாடு காதையில், கோவலன், கடலாடச் சென்ற காட்சியை விளக்கும் நிலையில் வரும் "விண் பொரு பெரும் புகழ்க் கரிகால்வளவன்" தன்பதம் கொள்ளும் தலைநாட் போல21 என்ற தொடரில், "கரிகால்வளவன்" என வந்திருக்கவும், அடியார்க்கு நல்லார், இக்கரிகால் வளவன்' எனக் கூறியுள்ளார்.

நாடு காண் காதையில் வரும், 'உழைப்புலிக் கொடித் தேர் உரவோன்22என்ற தொடரில் வரும் உரவோன்' என்பதற்கு, அடியார்க்கு ந்ல்லார், உரவோனாகிய கரிகாலன்' எனப் பொருள் கூறியுள்ளார்.

அடைக்கலக் காதையில் வரும் வேந்துறு சிறப்பின் விருச் சீர் எய்திய மாந்தளிர் மேனி மாதவி23 என்ற