பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

இருநில மருங்கின் பொருநரைப் பெறா அச் செரு வெங் காதலின் திருமாவுளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து.நண்ணார்ப் பெறுக இம். மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள் எனப். புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்
அசைவில் ஊக்கத்து நசை பிறக்கு ஒழியப்
பகை வில்க்கியது இப் பயங் கெழுமலை என இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர் லோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்...16

மேலே எடுத்தாளப்பட்ட சிலப்பதிகார வரிகளுள், வரி 89-ல் திருமாவளவன் என மூலத்தில் வந்திருக்கவும், உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், கரிகாலன் எனப் பொருள் கூறியுள்ளார். அதே போல், வரி 98ல் "வருவோன்" என, எப் பெயரும் கூறாது கூறியிருக்கவும்; அடியார்க்கு நல்லார்,அச்சொல்லால் குறிப்பிடப்படுபவன் கரிகாலன் என்றே பொருள் கூறியுள்ளார்.

அரங்கேற்றக் தாதையில, மாதவியின் ஆடலை நாடாளும் மன்னர்க்குக் காட்ட விரும்பியதைக் குறிக்கும். தொடரில், மன்னவன் பெயர் எதுவும் குறிப்பிடப்படாமல்,"பூழ் கழல் மன்னற்குக்காட்டல் வேண்டி"..17 என-மன்னன். பொதுவாகவே கூறப்பட்டிருக்கவும், பழைய உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் இருவருமே, "சோழன் கரிகாற் பெரு வளத்தான்" என்றே பொருள் கூறியுள்ளனர்.