பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

தமிழ் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகமாகாத என் நூல்கள் இருபத்தைந்தை மூன்றாண்டு கால அளவில் வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த திருவாளர் பிள்ளை அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எழுத்துப் பணி தொடர, மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் என்ற வெளியீட்டாளர் மூலம் பல நூல்கள் வெளி வந்தன. அரசியல் பணிகளுக் கிடையே கால்டுவெல் அவ்ர்களின் ஒப்பிலக்கண மொழி பெயர்ப்பு 1959ல் வள்ளுவர் பண்ணை மூலம் வெளி வந்தது.

1990 ஏப்ரல் 15ஆம் நாளன்று, என் ஐம்பதாவது நூலாக, திரு. பி.டி.சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு மொழி பெயர்க்கப்பெற்று, திரு. பிள்ளை அவர்களின் மருகர் திரு. இரா. முத்துகுமாரசாமி அவர்கள் முயற்சியால் கழக வெளியீடாக வெளியிடப் பெற்றது. அவருக்கு நன்றி

இப்போது (1991) அவர் பணிக்க திருவாளர் வி. ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின் Origin and spread of Tamils, (தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் Pre Aryan Tamil Culture (ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு) என்ற நூலை மொழிபெயர்த்து முடித்துவிட்டு: அவரின் மற்றொரு நூலாகிய, Stone Age in India (இந்தியாவில் கற்காலம்) என்ற நூலை மொழி பெயர்க்க எடுத்துக் கொண்டுள்ளேன். என் எழுத்துப்பணி தொடரும்: குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் புற்றி, பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். கல்வி கரையில கற்பவர் நாள்சில காலம் இடம் தந்தால் என் எழுத்துப் பணி ஓரளவேனும் முற்றுப் பெறும்.