பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

15

“காற்றை ஆட்கொண்டு கடலில் கப்பல் ஓடவிட்ட குலத்தில் வந்தவன். கரிகால் வளவன் எனும் பெயர் உடையான். வெண்ணிப் போர் வெற்றி கொண்டவன். அவன் பகைவன் (பெயர் குறிப்பிட்ப் படவில்லை) வடக்கு இருந்து உயிர் விட்டான் என்கிறது அவருடைய புறப் பாடல்.

"நளி இரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி அயல் யானைக் கரிகால் வளவ!
சென்றமர்க் கடந்ததின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றோ? கவிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம்,எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே"33

கரிகாலன் பற்றிப் பிற இலக்கியங்கள் கூற்று

கரிகாலன் இமயத்தில் புலி பொறித்த நிகழ்ச்சி, காவிரிக்குக் கரை அமைத்த சிறப்பு, பட்டினப் பாலை பாடிய புலவருக்குப் பரிசளித்த கொடைத்தன்மை போன்றவற்றை, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, 'குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், கலிங்கத்துப் பரணி ஆகிய இலக்கியங்களும் கூறியுள்ளன.

"தெள்ளருவிச்
சென்னிப் புலியேறு இருத்திக் கிரிகிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதி"34

-விக்கிரம சோழன் உலா.

"தலையேறு மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான் கண்கொண்டி சென்னிக் கரிகாலன்"35

-குலோத்துங்க சோழன் உலா