பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

"முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை முகில்தொட அமைத்தது அறிவோம்
இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறிக்க வட இமகிரி திரித்தது அறிவோம்."36

-குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்

"தொழுது மன்னரே கரைசெய் பொன்னி"37 -கலிங்கத்துப் பரணி.

"செண்டுகொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச் சிமயமால்வரை திரித்து அருளி, மீள அதனைப் பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுவில் பாய்புலிக் குறிபொறித்து அது மறித்தப்பொழுதே"38

-கலிங்கத்துப் பரணி.

"தத்துநீர் வரால் குறுமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன் பத்தொடு அறுநூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்"39

-கலிங்கத்துப்பரணி

.

ஆக, திருமாவளவன் வரலாறு அறியத் துணை நிற்பன, முடத்தாமக் கண்ணியாரின் பொருநராற்றுப்படை, கடிய லூர் உருத்திரங்கண்ண்னாரின் பட்டினப்பாலை ஆகிய இரண்டு நெடும்பாடல்களும், இளங்கோவடி களாரின் சிலப்பதிகார வரிகளும், பரணர் பாடிய அக நானூற்றுப் பாடல்கள் மூன்றும் (அகம் 125; 246, 376), கருங்குழல் ஆதனார் பாடிய புறநானூற்றுப் பாக்கள் இரண்டும் (7, 224), வெண்ணிக் குயத்தியார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றும். (46), ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் வரிகளும், ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி பாடல்களும்.ஆகிய இவை மட்டுமே.