பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோல்ந்தனார்.

17

"பெருநராற்றுப்படை பாட்டுடைத் தலைவன், கரிகாலனும், பட்டினப்பாலை பாட்டுடைத் தலைவன் திருமாவளவனும், வேறுவேறுபட்ட இருவரா? அல்லது இருவரும் ஒருவரா?”

இந்த வினாக்களுக்கு விடைகான் முற்பட்ட ஆய்வாளர்களிடிையே கருத்து முரண்பாடு காணப்படுகிறது: தெளிவான முடிவு ஆய்வாளர்களிடையே உருவாகவில்லை.

பேராசிரியர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்களுடைய கருத்து:

சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் டாக்டர் சி. ஈ. இராமச் சந்திரன் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகச் செய்தி ஏட்டில், மனித இனம் பற்றிய பொருட் பகுதியில் 'திருமா வளவன்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.40

அதில், புலவர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும், திருமாவளவனும், கரிகாலனும் வேறு வேறு பட்டவர் அல்லர். ஒருவரே என ஏற்றுக் கொண்டிருப்பதை மறந்து விட்டு, அவர்கள் இருவரும், ஒருவர் அல்லர். வேறு வேறு பட்டவர்களே என்பதை நிலைநாட்ட முன்வந்துள்ளார்.

தம் முடிவுக்கு திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்களைத் துணையாகக் கொண்டுள்ளார்.41 அம்முடிவுக்குத் திருவாளர் அய்யங்கார் கூறும் காரணங்கள் வருமாறு: -

1. எட்டுத்தொகை நூல்கள் எதுவும், கரிகாலனின் இமயப் படையெடுப்பு பற்றிக் கூறவில்லை.42

2. பத்துப்பாட்டில் ஒன்றாகிய பொருநராற்றுப்படை கூற்றுப்படி, கரிகாலன், தாய் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றுவிட்டான்.43 அதே