பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18.

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

பத்துப்பாட்டு வரிசையைச் சேர்ந்த பட்டினப்பாலை கூற்றுப்படி, திருமாவளவன், சிறையினின்றும் தப்பித்து வெளியேறித் தன் ஆற்றலால் அரசு உரிமையைப் பெற்றான்.44

3.எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு, கரிகாலன் வெண்ணியில் பெற்ற வெற்றியைக் கூறுகிறது.45 ஆனால், பட்டினப்பாலையோ, சிலப்பதிகாரமோ வெண்ணிப்போர் குறித்து ஏதும் கூறவில்லை.

4.அகநானூறு கரிகாலன் வாகைப் பறந்தலையில் பெற்ற ஒருவெற்றியைக் குறிப்பிடுகிறது.46 இந்த வெற்றியும் பட்டினப்பாலையிலோ, சிலப்பதிகாரத்திலோ இடம் பெறவில்லை.

5.புறநானூறு அவன் செய்த வேத வேள்விகள் பலவற்றைக் குறிப்பிடுகிறது.47 ஆனால், சிலப்பதிகாரமும், பட்டினப்பாலையும் அவன் சமயத் தொண்டு எதையும் குறிப்பிடவில்லை.

6.நச்சினார்க்கினியர் கூற்றுப்படி, திருமாவளவன் என்ற பெயரில் வந்திருக்கும், திரு' என்பது.பெருமை சேர்க்க வந்த சிறப்பு அடையாயின், அவன் பெயர் 'மாவளவன்' என்ற பெயர் உடைய சோழ அரசர்கள் மூவர் உள்ளனர்.

1. நலங்கிள்ளிச்சேட் சென்னியின் தம்பி மாவளத் தான்,

2. நெடுமாவளவன் என அழைக்கப்படும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.

3.திருமாவளவன்