பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. திருமாவளவனும், கரிகாலனும், வேறு பட்ட இருவர் என்ற முடிவு சரியானது தானா?

தமிழ் நாட்டு வரலாற்றை முழுமையாகவும் முறையாகவும் வரைந்து பல தொகுதிகளாக வெளியிட வேண்டும் என்ற சீரிய நோக்குடன் தமிழ்நாடு அரசு, வரலாற்றுத் துறையிலும், தமிழிலக்கியத் துறையிலும் பயிற்சியும் தேர்ச்சியும் வாய்ந்த அறிஞர்கள் இடம்பெற்றுள்ள வரலாற்றுக்குழு வொன்றை அமைத்துள்ளது. அவ்வரலாற்றுக் குழுவினரால் தொகுக்கப் பெற்று, தமிழ்நாடு அரசு வெளியீடாக, தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983ல் "தமிழ்நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்” என்ற நூலை வெளியிட்டுள்ளது, அத்தொகுப்பு:நூலில், திருமாவளவன் குறித்து: ஆய்வாளர்கள் பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். -

அதில், அடிப்படைச் சான்றுகள்-1 என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள, சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவராக விளங்கிய, பேராசிரியர் டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்களும்' சோழர்' என்றதலைப். பில் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ள ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை. சீனி வேங்கடசாமி அவர்களும்", குறுநில மன்னர்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியராக விளங்கிய